இளஞ்சிவப்பு மேலங்கியும், அதேவண்ணக் குளிர்க் குல்லாயும் அணிந்த ஒன்று தத்தக்கா புத்தக்கா என ஓடி வருகிறது. உற்றுப்பார்த்தால் அந்தக் குல்லாய்க்குள் ஒரு குழந்தை. ரஷ்ய இராணுவ வீரரை ஓடிவந்து கட்டிப்பிடித்துக் கொள்கிறது. இன்னும் பல நீல, வெள்ளை, சாம்பல் நிறக் குல்லாய்களால் அவர் சூழ்ந்து கொள்ளப்படுகிறார். அரங்கமே எழுந்துநின்று, கைதட்டி ஆரவாரம் செய்கிறது.
அந்த விளையாட்டு அரங்கம் முழுக்க மக்கள். உக்ரைன் மீதான போரை ஆதரிக்கும் மக்கள். வண்ண வண்ணக் குல்லாய்களில் இருந்தவை உக்ரைனியக் குழந்தைகள். தகர்க்கப்பட்ட மரியுபோல் நகரத்தினர். இவர்களைக் காப்பாற்றி, ரஷ்யாவிற்குள் பாதுகாப்பாய் கூட்டிவந்த மீட்பரே அந்த இராணுவ வீரர். இக்குல்லாய்களைப் பரிசுகளுடன் தங்கள் குடும்பங்களுக்குள் வரவேற்ற ரஷ்யப் பெற்றோரும் அருகில் இருந்தனர். இது ரஷ்யத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது.
ரஷ்யா கொண்டாடிய இந்த நிகழ்வே, அதன் அதிபர் புடினை போர்க் குற்றவாளி ஆக்கியது. அந்நாட்டின் குழந்தைகள் உரிமை ஆணையர், மரியா லிவோவா பியூலோவாவையும் சேர்த்து 16,221 உக்ரைன் குழந்தைகளை ரஷ்யாவுக்கு நாடு கடத்தியதற்காக. மேற்கூறிய நிகழ்வு குற்றத்தின் முக்கிய ஆவணம்.
இதுபோக, 400 சடலங்களைத் தாங்கிய புச்சா மண்ணின் படுகொலைகள்; 450 பொதுமக்களின் சடலங்கள் புதைக்கப்பட்ட இசியும் நகரப் படுகொலைகள்; குழந்தைகள் தஞ்சம் புகுந்திருந்த திரையரங்கம், மருத்துவமனைகள் மீது தாக்குதல்; குண்டுகளால் அழித்த உக்ரைன் நகரின் உள்கட்டமைப்புகள், மின் நிலையங்கள், அணைகள் எனப் போர்க் குற்றங்களின் பட்டியல் இன்னும் நீண்டவண்ணம் இருக்கிறது.
போர்க் குற்றவாளிகளை அறிவிப்பது யார்?
Add Comment