Home » பேசினால் தாக்குவோம்!
உலகம்

பேசினால் தாக்குவோம்!

மார்ச் மாதத்தில் இருந்தே ராஃபாவில் தாக்குதல் தொடங்கப் போகிறோம் என்று சொல்லிக் கொண்டிருந்தது இஸ்ரேல். தினமும் நடக்கும் தாக்குதல் போலல்லாது முழுவேகத்தில் உள்ளே நுழைந்து தாக்கும் திட்டம் அது. காஸா பாலஸ்தீனியர்கள், வடக்கு முனையில் ஆரம்பித்துக் கொஞ்சம் கொஞ்சமாக இடம் பெயர்ந்து தென்கோடியில் உள்ள ராஃபாவில் தங்கியுள்ளனர். எகிப்து எல்லையில் உள்ளது இப்பகுதி.

கைய்ரோவில் நடந்த பேச்சுவார்த்தைகளில் ஏப்ரல் இறுதியில் முன்னேற்றம் இருந்தது போலத் தோற்றம் இருந்தது. மே 4-ஆம் தேதி “ஒப்பந்தம் ஏற்பட்டாலும் இல்லாவிட்டாலும் ராஃபாவில் நுழைந்து ஹமாஸை முறியடித்து இறுதி வெற்றியைப் பெற்றே தீருவோம்” என்று அறிவித்தார் நெதன்யாகு. இதைத் தொடர்ந்து ராஃபாவில் இருந்து கரீம் ஷலோம் பகுதியை நோக்கிச் சில ராக்கெட்டுகளை எறிந்தது ஹமாஸ். நான்கு இஸ்ரேல் ராணுவ வீரர்கள் இறந்ததாக அறிவித்தது இஸ்ரேல்.

ஐ.நா., அமெரிக்கா எச்சரிக்கைகளைப் புறந்தள்ளி ராஃபாவுக்குள் நுழைய ஆரம்பித்து விட்டது இஸ்ரேல். பாலஸ்தீனியர்களை கிழக்கு ராஃபாவில் இருந்து வடக்கு ராஃபாவுக்கு இடம்பெயரக் கட்டளையிட்டுள்ளது. கிழக்கு ராஃபா முழுவதும் இஸ்ரேல் படைகள்தான் தற்போது உள்ளன. முழு ராஃபாவையும் ஆக்கிரமித்தால்தான் இஸ்ரேல் பாதுகாப்பாக இருக்க முடியும் என்கிறது. 35 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்ட பிறகும், அந்தக் கனவு நிறைவேறப் போவதில்லை என்பதைச் சுட்டுகிறது மேற்குக் கரையில் இருந்து வந்த செய்தி.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!