அடுமனை அரசியல்
அலாரம் இல்லாமல் காலைப் பொழுது அமைதியாகத் தொடங்குகிறது. அடுத்ததாகச் சமையலறைக்குள் அடி எடுத்து வைக்கிறோம். அப்போது அந்தக் காலை நேரம் மேலும் சுறுசுறுப்பாக மாறுகிறது.
சமையலறையில் நெஸ்ப்ரசோவில் காஃபி தயாராகும் ஒலி. அதன் நறுமணம் மெல்லப் பரவுகிறது. அதேநேரத்தில் நாளின் அடுத்த கட்டம் தொடங்க வேண்டும். காலை உணவு தயாரிப்பது வெறும் சமையல் வேலை அல்ல. அது சிந்தனையையும் செயலையும் இணைக்கும் ஓர் அற்புதமான ‘பலபணி அரங்கம்’.
கையில் ஆவி பறக்கும் ஒரு கப் காஃபி. ஒருபுறம் நியூயார்க் டைம்ஸ் அல்லது அரசியல் பாட்காஸ்ட் செய்தி அலசல்கள் காதில் ஒலிக்கும். இன்னொரு புறம் கைகள் காய்கறிகளை நறுக்கும். இங்கே ஒரு முக்கியமான தொழில்நுட்பமும் உள்ளது. பாட்காஸ்ட் அல்லது முக்கிய உரையாடல்களைக் கேட்கும்போது கூர்ந்து கவனிக்க வேண்டும். பொறி தட்டும் சிறந்த கருத்துகளை உடனே பதிவு செய்ய வேண்டும்.











Add Comment