பகிர்ந்து கொடு, பணியை முடி
பணிகளைப் பகிர்ந்து கொடுத்தல் ஒரு முக்கியமான மேலாண்மைத் திறன். ஆனால் அதை நடைமுறைப்படுத்துவது பலருக்குக் கடினம். மேலாளர்கள் பணியைப் பிரித்துக் கொடுக்கத் தயங்குவார்கள். தானே செய்வது வேகமாக முடியும் என நினைப்பார்கள். விளக்கிச் சொல்ல அதிக நேரம் ஆகும் என எண்ணுவார்கள்.
தமக்குத் தெரிந்த திறமையை மற்றவருக்குச் சொல்லிக்கொடுக்க விரும்பாதவர்களும் உண்டு. சில பணிகளைத் தானே முடிக்கும் மகிழ்ச்சியை விட்டுக்கொடுக்க மனம் வராது. மற்றவர் வேலைப்பட்டியலில் கூடுதல் சுமை சேர்ப்பதாகக் குற்ற உணர்வும் வரும். யாரிடம் கொடுப்பது என்ற நம்பிக்கையின்மையும் ஒரு காரணம்.
இந்தத் தயக்கத்தைக் களைய, முதலில் நம் மனநிலையை மாற்றலாம். பகிர்வது பொறுப்பைத் தட்டிக்கழிப்பது அல்ல. அது தலைமைப் பண்பின் அடையாளம்.
காரணம் எதுவாக இருந்தாலும், இந்தத் திறனை மேம்படுத்துவது அவசியம். பகிர்ந்து கொடுக்காமல் தொடர்ந்து தானே செய்வது நல்ல விளைவைத் தராது. வேலைப்பட்டியல் நாளும் நீளும். மன அழுத்தம் அதிகரிக்கும். தவறான பணிகளுக்கு முன்னுரிமை கிடைக்கும். குழு உறுப்பினர்களின் நம்பகத்தன்மை குறையும்.











Add Comment