சும்மா இருக்கிறது எவ்ளோ கஷ்டம்னு தெரியுமா என நடிகர் வடிவேலு ஒரு திரைப்படத்தில் கேள்வி கேட்பார். அது நிஜம்தான் என நினைக்கும் அளவுக்கு அந்தத் திரைப்படத்தில் சம்பவங்கள் இருக்கும். ஜப்பானில் உள்ள ஷோஜி மோரிமோட்டோ என்பவருக்கும் இது பொருந்தும். நாம் வடிவேலுவின் நகைச்சுவையைப் பார்த்துச் சிரித்துவிட்டு நகர்ந்து விட்டோம். ஆனால், ஷோஜி மோரிமோட்டோ அதனைச் சாதுர்யமாகப் பணமாக்கிக் கொள்கிறார்.
ஷோஜி மோரிமோட்டோ ஜப்பானில் வசித்து வருகிறார். பணிபுரிந்த நிறுவனத்தில் தன்னுடைய வேலைக்கு அவர் மதிப்பளிக்கவில்லை என்பதற்காகப் பணிநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். ஷோஜி மோரி மோட்டோவின் பாஷையில் சொல்வதானால் ‘சும்மா இருந்திருக்கிறார்’. வேலை போய்விட்டது.
சமூக ஊடகங்களில் நிறைய பின்தொடர்பாளர்களை வைத்திருந்த அவர் மாற்றி யோசித்தார். 2018ஆம் ஆண்டில் கீழ்க்கண்டவாறு அவர் தன்னை விளம்பரப்படுத்திக் கொண்டார்.
‘எந்த வேலையும் செய்யாமல் உங்களுடன் சும்மா இருப்பதற்கு நான் தயாராக இருக்கிறேன். அதற்குரிய கட்டணம் செலுத்திவிட்டு நீங்கள் என்னைப் பணியமர்த்திக்கொள்ளலாம்.’
இதென்ன பைத்தியக்காரத்தனமாக இருக்கிறது, இதற்கெல்லாம் யார் முன்வருவார்கள் என நீங்கள் யோசிக்கலாம். ஆனால் ஜப்பானியர்கள் பாய்ந்து வந்து ஷோஜி மோரிமோட்டோவை வாடகைக்குப் பணியமர்த்திக் கொண்டார்கள்.















Add Comment