Home » தப்பிப் பிழைத்த தமிழர்
உலகம்

தப்பிப் பிழைத்த தமிழர்

சிவராசா அனோஜன்

‘வாழ்வாதாரத்துக்காகத் தொழில் தேடி வெளிநாடு சென்றிருக்கும் எந்தவொரு இலங்கையரும் தாம் தனித்திருப்பதாக உணர இடமில்லை’ – இலங்கையரான சிவராசா அனோஜனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை சவுதி அரேபியா நீக்கிக் கொண்டதற்காக இலங்கை அதிபர் அனுர குமார திசாநாயக்க வெளியிட்ட பதிவின் கடைசி வாக்கியமாக இந்த விடயம் அமைந்திருந்தது.

இலங்கையில் ஒவ்வொரு வருடமும் தொழில் தேடி ஆயிரக்கணக்கானோர் வெளிநாடுகளுக்குச் செல்கின்றனர். குறிப்பாக மத்தியக் கிழக்கு நாடுகளுக்கு. அங்குதான் வாய்ப்புகளும் சம்பளமும் அதிகம். அதேநேரம், இஸ்லாமியச் சட்டங்கள் என்ற பெயரில் கடுமையான விதிமுறைகளைப் பின்பற்றும் சவுதி போன்ற நாடுகளில் காத்திருக்கும் ஆபத்துகளும் அதிகம்.

இலங்கையில் பெரும்பான்மை மக்களுக்கும் தமிழ் பேசும் மக்களுக்கும் இடையேதான் கடந்த காலங்களில் இன ரீதியான பிரச்சினைகள் ஏற்பட்டிருந்தன. அது முப்பது வருடகால யுத்தத்துக்கும் வழிவகுத்திருந்தது. அவற்றைச் சரிசெய்ய தற்போதைய அரசாங்கம் ஓரளவுக்கு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனால் நாயொன்று உதைக்கப்பட்ட விவகாரம் சிறுபான்மை மக்களுக்குள்ளேயே பெரும் பிளவை ஏற்படுத்தக்கூடிய அபாயத்தை உருவாக்கியிருந்தது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!