அண்மையில் பங்கஜ் ரிஷிகுமார் To die a French Man என்ற ஆவணப்படத்தை வெளியிட்டிருக்கிறார். புதுவையின் முனுசாமி (Mounisaamy) ஃபிரெஞ்சுப் பிரஜையாக முயல்வதன் நீண்ட போராட்டமே கதை. இந்தியாவும் ஃபிரான்ஸும் இன்றும் தமக்குக் கடமைப்பட்டிருக்கின்றன என்கிறார் முனுசாமி.
ராமன்(அ) Roman, வரதராஜுலு (அ) Vardaroujouloo, அன்பு (அ) Anbou போல முனுசாமி பெயருக்கும் பின்புலம் உண்டு.
புதுவை மாநிலம் பாண்டி, மாஹே, ஏனாம், காரைக்கால், சந்தர்நாகூர் என்று ஐந்து இடங்களை உள்ளடக்கியது. இவை ஃபிரெஞ்சு ஆளுகையின் கீழிருந்தவை.
சந்தர்நாகூர் 1949இல் மக்கள் ஓட்டெடுப்பில் வங்காளத்துடன் இணைந்தது. இது ஆட்சியாளர்களுக்கு அதிர்ச்சியாக அமைந்தது. சட்டம் எழுத இரண்டு வருடங்கள், ஒப்புதல் பெற ஆறு வருடங்கள் எனப் புதுச்சேரி இணைப்பு இழுபட்டது. இறுதியாக 1962இல் ஃபிரான்ஸ் வெளியேறியது.















Add Comment