Home » இன்னொரு குடும்பக் கதை (தைலாபுரம் வர்ஷன்)
தமிழ்நாடு

இன்னொரு குடும்பக் கதை (தைலாபுரம் வர்ஷன்)

பாட்டாளி மக்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் அன்புமணியை நீக்கி உத்தரவிட்டிருக்கிறார் அந்தக் கட்சியின் நிறுவனர் ராமதாஸ். வேண்டுமென்றால் தனிக்கட்சி தொடங்கிக்கொள்ளட்டும் எனப் போகிறபோக்கில் அன்புமணிக்கு இலவசமாக ஆலோசனையையும் கொடுத்திருக்கிறார். என்றைக்காவது ஒரு நாள் ‘அன்புமணி ராமதாஸாகிய நான்’ என முதலமைச்சராகப் பதவியேற்கலாம் என்றிருந்த அன்புமணிக்கு ‘ரா’ என்னும் இனிஷியலை மட்டும் பயன்படுத்திக்கொள்ள அனுமதி அளித்திருக்கிறார்.

2024ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் புதுச்சேரியில் பாமகவின் பொதுக்குழு கூடியது. கட்சியின் நிறுவனரான ராமதாஸ் பேசத் தொடங்கினார். அன்புமணியின் அரசியல் செயல்பாடுகளுக்கு உறுதுணையாக முகுந்தனை இளைஞரணித் தலைவராக நியமிப்பதாக அறிவித்தார். அதற்கு அந்த மேடையிலேயே தன்னுடைய எதிர்ப்பைப் பதிவுசெய்தார் அன்புமணி. முகுந்தன் கட்சியில் சேர்ந்த மூன்று மாதங்களில் இவ்வளவு பெரிய பொறுப்பைக் கொடுப்பது சரியல்ல எனச் சொன்னார். இந்த விவகாரம் அங்கேயே விவாதமாக மாறியது. ‘இந்தக் கட்சி நான் வளர்த்தது, நான் சொல்வதைத்தான் கேட்க வேண்டும்’ என ராமதாஸ் சொல்ல, ‘இனி தன்னைப் பனையூரில் சந்திக்கலாம்’ என அலைப்பேசி எண்ணைக் கொடுத்துவிட்டுச் சென்றார் அன்புமணி. அப்பாவுக்கும் மகனுக்குமிடையில் புகுந்த இந்த முகுந்தன் யார் என்ற எல்லோர் மனதிலும் கேள்வி எழுந்தது.

ராமதாசுடைய மூத்த மகளின் மூன்றாவது மகன்தான் முகுந்தன். ராமதாசுக்கு உதவியாகவும், கட்சியின் தகவல் தொழில்நுட்ப அணியைக் கவனித்து வந்தவருமான முகுந்தனுக்குப் பெரிய பொறுப்பைக் கொடுக்க வேண்டுமென ராமதாஸ் முடிவு செய்திருந்தார். ஆனால் கட்சிக்குள் குடும்பத்தைச் சேர்ந்த இன்னொருவர் வந்துவிடக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தார் அன்புமணி. அதுவரை தைலாபுரத் தோட்டத்துக்குள் நடந்த சண்டை பொதுவெளிக்கு வந்தது. உண்மையில் அதற்கும் முன்னரே இருவருக்கும் இடையிலான பிரச்சினை ஆரம்பித்து விட்டிருந்தது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!