மே எட்டாம் தேதி பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியாகின. வழக்கம் போலப் பெற்றோரும் ஆசிரியர்களும் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு இனிப்பை ஊட்டும் புகைப்படங்கள் தொலைக்காட்சி, செய்தித்தாள்களில் இடம் பெற்றுவருகின்றன.
மாணவர்களும் ஆட்சியர், மருத்துவர் என அவரவரது ஆசைகளை, எதிர்காலத் திட்டங்களை உற்சாகமாகப் பேட்டி கொடுத்துக்கொண்டிருக்கின்றனர். இதே தேர்வு, இதே வெற்றிதான். ஆனால் வேறொரு காரணத்தால் கவனம் பெற்றுள்ளார் ராணி. அவருக்கு வயது அறுபத்தெட்டு என்றால் ஆ என்று திகைத்துவிடுகிறீர்கள் அல்லவா? அதுதான் விஷயம். அவரை சந்தித்துப் பேசினோம்.
“ பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வு அவ்வளவு எளிதல்ல. கேள்விக்கான பதில்கள் விரல் நுனியில் இருந்தால் மட்டுமே, அங்கு கொடுக்கப்படும் மூன்று மணி நேரத்தில் முழுமையாக தேர்வை எழுதி முடிக்க இயலும். அங்கே உட்கார்ந்து யோசித்துக்கொண்டிருப்பதற்கு எல்லாம் அவகாசம் இருக்காது. நான் தேர்வுக்குத் தயாராகும் போது, எழுதிப் பார்த்துத்தான் ஒவ்வொரு பாடத்தையும் கற்றேன்” எனப் பேசத் தொடங்கினார்.














Add Comment