Home » கடைசி ரசவாதி
சிறுகதை

கடைசி ரசவாதி

ஏன் இந்தப் பயணத்தை மேற்கொண்டேன் என்று எனக்குச் சரியாகச் சொல்லத் தெரியவில்லை. இந்த விஷயத்தை அவரிடம் சொல்லியே ஆக வேண்டுமென்று மனம் கழுத்தைப் பிடித்துத் தள்ளியதால் இருக்கலாம். ஆனால், இப்போது நான் எடுத்த முடிவு முட்டாள்தனமாகத் தோன்றுகிறது. அவர் உயிரோடு இருக்கிறாரா என்று கூடத் தெரியவில்லை. கடைசியாக அவரைப் பார்த்தது நாற்பது வருடங்களுக்கு முன் என நினைக்கிறேன்.

அப்போது நான் கல்லூரியில் இளங்கலை வேதியியல் படித்துக்கொண்டிருந்தேன். அதன்பின் மேற்படிப்புக்காக மும்பை சென்றாகிவிட்டது. முதுகலைப் படிப்பை முடித்ததும் பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் முனைவர் பட்ட ஆராய்ச்சி. பிறகு, போஸ்ட் டாக்டரல் ரிசர்ச்சுக்காக லண்டன் சென்றவன், காதலியைக் கரம் பிடித்து அங்கேயே செட்டில் ஆகிவிட்டேன். ஏனோ, அதன் பின் சொந்த ஊருக்கு ஒருமுறைகூட வரமுடியாமலே போனது.

உயிரோடிருந்தால் இப்போது அவருக்கு எவ்வளவு வயதிருக்கும் எனக் கணக்கிட்டது மனம். அவர் வயதேயான அப்பா காலமாகிப் பதினைந்து ஆண்டுகள் கடந்துவிட்டன. அதனால், அவருக்கு எப்படியும் எண்பத்தைந்து வயதுக்கு ஓரிரு ஆண்டுகள் கூடக்குறைய இருக்கலாம். பேருந்து கிளம்பப் போவதைத் தெரிவித்த ஏஐ குரல் சிந்தனையைக் கலைத்தது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



உங்கள் எண்ணம்

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!