Home » எடுத்த புத்தகத்தைப் படித்து முடிப்பது எப்படி?
எழுத்து

எடுத்த புத்தகத்தைப் படித்து முடிப்பது எப்படி?

புத்தகம் படிப்பதில் உள்ள பெரிய சிக்கலே, எடுப்பதில் பாதி படிக்க முடியாதபடி இருப்பதுதான்.

1. போரடிக்கும் எழுத்து நடை
2. எழுதத் தெரியாமல் எழுதியிருப்பது
3. சப்ஜெக்டுக்கு வராமல் ஊர் உலகமெல்லாம் சுற்றி வளைப்பது
4. நிறுத்தற்குறி வைக்கும் வழக்கமே இல்லாமல், பத்து வரிக்கு ஒரு சொற்றொடரை அமைத்திருப்பது
5. விறுவிறுப்பே இல்லாமல் இருப்பது
6. சுவாரசியம் அற்று இருப்பது
7. பண்டித மொழியில் எழுதியிருப்பது
8. தொட்ட இடமெல்லாம் தகவல் பிழைகள்
9. வரிக்கு நூறு எழுத்துப் பிழைகள்

இன்னும் சொல்லலாம். ஒரு புத்தகம் படிக்கப் படாமல் இருக்கப் பல காரணங்கள் உண்டு. ஆனால் என்ன குறைபாடு இருந்தாலும் படித்தே தீர வேண்டிய புத்தகங்கள் எனச் சில உண்டு. பாடப் புத்தகங்கள் போல. சகித்துக்கொண்டாவது படித்துத்தான் ஆக வேண்டும். ஆனால் முடியவில்லை. இழுக்கிறது. என்ன செய்யலாம்? எப்படிப் படிக்கலாம்?

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



உங்கள் எண்ணம்

  • Nagarajan Ramasamy says:

    எல்லாப் புத்தகங்களும் எல்லோருக்காகவும் எழுதப் படுவதில்லை..படிக்கப் பட வேண்டும் என்று ஒரு எழுத்தாளர் ஒன்றை எழுதுவது , அவ்வளவு சிறப்பாக அமைவது இல்லை..தன் சுய திருப்திக்காக ,நியாயமாக எழுதப் படுபவை கட்டாயம் படிக்கப் படும்.

  • Siva Sankaran Somaskanthan says:

    சிறு வயதில் இருந்து வாசிப்பார்வமும் வாசிப்பில் ருசி கொண்டவனாக இருந்த போதும் சோம்பலினாலோ மற்ற குறைகளினாலோ எல்லா புத்தகத்தையும் கை(வாய் என்றும் சொல்லலாம்) வைத்துவிட்டு பல புத்தகங்கள் வைத்திருக்கிறேன் .எனக்கென்றே வந்திருக்கிறது இந்த கட்டுரை.

    படிப்பதற்கென்று நேரமும் இடமும் கிடைத்தால் நல்லது . கவனச்சிதறல் இந்த காலகட்டத்தில் பெரிய சிக்கல். சராசரி தமிழ் வீடுகள் இன்று தொலைக்காட்சி , மொபைல் , கல்யாண மண்டபம் , பொது விழா என்று இரைச்சலால் சூழப்பட்டிருக்கிறது என்று தோன்றுகிறது

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!