சென்னை முழுவதும் இருநூறு இடங்களில் ரெட் பட்டன் ரோபோகாப் என்ற நவீன காவல் எந்திரத்தை நிறுவவுள்ளது பெருநகர சென்னை காவல் துறை. இந்த எந்திரத்திலுள்ள சிவப்பு பட்டனை அழுத்துவதன் மூலம் உடனடியாகக் காவல் துறையின் உதவியைப் பெறலாம்.
சென்னை நகரம் அதிகமான மக்கள் அடர்த்திகொண்டதாக உள்ளது. ஆண்-பெண் பேதமின்றி விடியவிடிய மக்கள் நடமாடும் நகரமாகத் திகழ்கிறது சென்னை. தகவல் தொழில்நுட்பம், மென்பொருள் பொறியியல் போன்ற துறைகளில் பணிபுரியும் பெண்கள் நள்ளிரவு நேரங்களில்கூட வீடு திரும்பவேண்டியுள்ளது. உணவு டெலிவரி நிறுவனங்களில்கூடக் கணிசமான அளவில் பெண்கள் பணியாற்றிவருகின்றனர். ஆட்டோ ஓட்டும் பெண்களின் எண்ணிக்கையும் வெகுவாக உயர்ந்துள்ளது. இச்சூழலில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டிய அவசியம் அரசுக்கு உள்ளது.
இதற்காகப் பெருநகர சென்னை காவல் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கட்டுப்பாட்டு அறை வழியாகப் பெறப்படும் அவசர அழைப்புகளுக்கு வினையாற்றும் நேரம் இப்போது வெறும் ஐந்து நிமிடங்கள் மட்டுமே என்று அண்மையில் அது கூறியுள்ளது.














Add Comment