வாழ்க்கையில் தவிர்க்க முடியாதது மரணம். ஆனால் அந்த இறுதிக்கட்டத்தையும் இயற்கைக்கு உதவும் விதமாக மாற்ற முடியும் என்கின்றனர் இங்கிலாந்தைச் சேர்ந்த ரெஸ்டிங் ரீஃப் என்ற புதிய துளிர்தொழில் நிறுவனத்தினர். இயற்கை எய்திய அன்பிற்குரியவர்களின் சாம்பலிலிருந்து செயற்கை படிமப் பாறைகளை உருவாக்கி பிரிட்டிஷ் கடற்படுகைகளில் கட்டமைக்கக்கூடிய புதிய மாற்றுத் திட்டத்தை தொடங்கியுள்ளது இந்நிறுவனம்.
வழக்கமான பாரம்பரிய இறுதிச்சடங்குகளால் சுற்றுச்சூழலுக்கு விளையும் தீமைகளை கருத்தில் கொள்கிறது இந்நிறுவனம். எரியூட்டும் இறுதிச்சடங்குகளால் நபர் ஒருவரிடமிருந்து 400 கிலோ கிராம் கார்பன்-டை-ஆக்சைடும் புதைத்தல் முறைப்படி நபர் ஒருவரிடமிருந்து 833 கிலோகிராம் கார்பன்-டை-ஆக்சைடும் வெளியேறுகின்றன. எம்பாமிங் முறைகளால் வெளியேறும் வேதியியல் கழிவுகள் மண்ணையும் நிலத்தடி நீரையும் மாசுபடுத்துகின்றன. இவற்றிற்கெல்லாம் மாற்று வழியாக உருவானதே ரெஸ்டிங் ரீஃப் (இளைப்பாறும் படிமப் பாறைகள்) நிறுவனம்.















Add Comment