Home » மன்னர் வேண்டாம்!
உலகம்

மன்னர் வேண்டாம்!

ஜூன் 14ஆம் தேதி அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் பிரமாண்ட இராணுவ அணிவகுப்பு நடைபெற்றது. அமெரிக்க இராணுவத்தின் இருநூற்று ஐம்பதாவது பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக இந்த அணிவகுப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டதாகச் சொல்லப்படுகின்றது. ஆனால் அது மட்டுமே காரணமன்று. அதே நாள்தான் அதிபர் டிரம்ப்பின் பிறந்தநாள் என்பதும் இதற்கு மிக இன்றியமையாக் காரணமாகிப்போனது.

இவ்வாறான அணிவகுப்புகள் பல நாடுகளில் இராணுவத்தின் வலிமையைப் பறைசாற்ற மேற்கொள்ளப்படும் வழக்கமான ஒன்றுதான். ஒவ்வொரு வருடமும் நடைபெறும் இந்திய குடியரசு தின அணிவகுப்பு, பிரான்சு இராணுவத்தின் பாஸ்ட்டீல் தின (Bastille Day) அணிவகுப்பு மற்றும் ரஷ்யாவின் வெற்றி நாள் (Victory Day) கொண்டாட்ட அணிவகுப்பு போன்றவற்றை எடுத்துக்காட்டாகக் கூறலாம். ஆயினும் அமெரிக்காவில் இராணுவ அணிவகுப்புகள் வழக்கமான வருடாந்திர நிகழ்வல்ல. அதன் வரலாற்றிலேயே மிகச் சொற்பமாகவே நடைபெற்றுள்ளன. கடைசியாக 1991ஆம் ஆண்டு வளைகுடாப் போரின் வெற்றியைக் கொண்டாடும் வகையில் மாபெரும் அணிவகுப்பு தலைநகரில் நடத்தப்பட்டது. அதன் பிறகு இப்போதுதான்.

டானல்டு டிரம்ப் அமெரிக்காவைக் காக்க வந்த தேவதூதன் என்ற பிம்பம் வெகு நேர்த்தியாகத் திட்டமிட்டுக் கட்டமைக்கப்படும் இவ்வேளையில் அவரின் பிறந்தநாளும் இராணுவத்தின் தொடக்க நாளும் ஒரே நாள் என்ற தற்செயல் நிகழ்வை சும்மா விடுவார்களா என்ன? அதுவும் ஆகச் சிறந்த விளம்பர விரும்பியான டிரம்ப், இப்பொன்னான வாய்ப்பை வீணடிப்பாரா என்ன? இப்படி நாளும் கோளும் ஒன்றாய் அமைந்திருப்பது தற்செயல் அல்ல, தெய்வச்செயலே என்ற நம்பிக்கை திட்டமிட்டு வலதுசாரி ஊடகங்களால் பரப்பப்பட்டது. இதைக் கேட்ட அவரின் ஆதரவாளர்கள் பரவசத்தின் உச்சநிலைக்கே சென்றார்கள்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!