தென் அமெரிக்காவின் பிரேசில் நாட்டில் உள்ள முக்கிய நகரம் ரியோ டி ஜெனிரோ. பிரேசில் காபி போலப் போதைப்பொருள் கடத்தல் இங்கே சர்வ சாதாரணமானது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க, போலிஸ் ஒரு மாபெரும் சோதனையை மேற்கொண்டது. விளைவு, ரியோ டி ஜெனிரோ தெருக்களில்130 பிணங்கள் குவிந்தன. இதில் அப்பாவி மக்களும் உயிரிழந்ததுதான் இன்னும் வேதனை.
இந்தச் சோதனையின்போது அறுபது தீவிரவாதிகளைக் கொன்றுவிட்டதாகவும், ஏராளமான ஆயுதங்கள் பிடிபட்டதாகவும் போலீசும் அரசாங்கமும் மார்தட்டிக் கொள்கின்றன. ஆனால் இந்த ஆபரேஷனின் முக்கிய நோக்கமான ரெட் கமாண்ட் போதைப்பொருள் குழுவின் தலைவனை இன்னும் பிடித்த பாடில்லை.
ரெட் கமாண்ட் போதைப்பொருள் குழு பிரேசிலின் மிகப் பழமையான, சக்திவாய்ந்த தீவிரவாதக் குழு. 1970களில் பிரேசிலில் சர்வாதிகார ஆட்சி நடந்தது. அப்போது சில இடதுசாரி அரசியல்வாதிகளைச் சிறையில் அடைத்தது அரசாங்கம். அதே சிறையில் சாதாரணக் குற்றவாளிகளும் இருந்தனர். ‘எதிரிக்கு எதிரி நண்பன்’ என்ற கணக்கில் இவர்கள் எல்லோரும் சேர்ந்து உருவாக்கிய குழுதான் ரெட் கமாண்ட்.














Add Comment