Home » வெல்வாரா ரிஷிசுனக்?
உலகம்

வெல்வாரா ரிஷிசுனக்?

ரிஷி சுனக்

22 மே 2024 அன்று பிரித்தானியப் பிரதமர் ரிஷி சுனக் ஜூலை 04-ஆம் தேதியன்று பொதுத் தேர்தல் நடத்தப் போவதாக ஒரு அதிரடியான அறிவித்தல் கொடுத்தார். பாராளுமன்றத் தேர்தலை நடத்த வேண்டிய கட்டாயம் இப்போது இல்லை. கடந்த பாராளுமன்றத்தின் ஐந்து ஆண்டுக் காலம் முடிவது டிசம்பர் மாதத்தில்தான். அதற்கு ஐந்து மாதங்கள் முன்னதாகத் தேர்தல் நடத்துவார் என்று பலரும் எதிர்பார்க்கவில்லை.

கடந்த பதினான்கு வருடங்களாக கன்சர்வேடிவ் கட்சி ஆட்சியில் இருக்கிறது. பொதுவாகவே நீண்ட நாட்கள் ஒரு கட்சியில் ஆட்சியில் இருக்கும் போது பொதுமக்களிடையே அதிருப்தி தோன்றுவது ஜனநாயக நாடுகளில் ஆச்சரியப்படத் தக்க விஷயம் இல்லை. தற்போதைய பிரதம மந்திரி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் அல்ல. கடைசிப் பொதுத் தேர்தலை வெற்றிகரமாக நடத்திப் பெரும் வெற்றி கண்டவர் போறிஸ் ஜோன்சன். அவரது தலைமையில் கன்சர்வேடிவ் கட்சி பெரும்பான்மைக் கட்சியாக ஆட்சிக்கு வந்தது 2019 டிசம்பர் மாதம்.

பெருந்தொற்றால் வந்த அதிருப்தி மற்றும் கட்சி உறுப்பினர்களால் வந்த சிக்கல்கள் காரணமாகப் போறிஸ் ஜோன்சன் பதவி விலகும் நிர்ப்பந்தத்திற்கு ஆளானார். அவரைத் தொடர்ந்து லிஸ் டிரஸ்ட் நாற்பத்தொன்பது நாட்கள் பிரதமராகப் பதவி வகுத்தார். அவரும் வெளியே தள்ளப்பட 25 அக்டோபர் 2022 அன்று பதவிக்கு வந்தவரே ரிஷி சுனக்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!