அமெரிக்கக் குடியரசுக் கட்சியின் இன்னொரு முக்கிய வேட்பாளர் ஃப்ளோரிடா ஆளுநர் ரானால்ட் டிசாண்டிஸ்.
முன்னாள் அதிபர் டிரம்ப் என்ற ஒரு கோப்பை நீரைச் சின்னக் குவளைகளில் ஊற்றினால் எப்படி ஒவ்வொரு கோப்பை நீரும் ஒரே தன்மையோடு ஆனால் அந்த அந்தக் கோப்பைகளின் வடிவோடு இருக்குமோ அதேபோலத்தான் ரானும் வேறு உருவம் ஆனால் டிரம்ப்பின் அதே கொள்கைகளைக் கொண்டவர். முதன் முதலாகக் கடந்த வாரம் நடந்த நகரசபை கூட்டத்தில் முன்னாள் அதிபர் டிரம்ப்பை எதிர்த்துப் பேசியிருக்கிறார். காப்பிடல் ஹில்லில் நடந்த தாக்குதல்களையும் விமரிசித்துப் பேசியிருக்கிறார்.
45 வயதான ரான் டிசான்ட்டிஸ், மிகவும் சிறந்த ஆனால் பழமைவாத எண்ணங்களைக் கொண்ட ஓர் அரசியல்வாதி. தென் இத்தாலியில் இருந்து அமெரிக்காவிற்குக் குடிபெயர்ந்த முன்னோர்கள். அவரது அன்னை செவிலியர், அப்பா சந்தை ஆராய்ச்சி பெட்டிகள் நிறுவும் தொழில் செய்பவர் என்ற சாதாரண மத்தியத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர்.
யேல் பல்கலையில் சரித்திரம் இளங்கலை படிக்கும் போதே விளையாட்டுத் துறையில் பயிற்சியாளராகவும் எலக்ட்ரீஷியனாகவும் பகுதிநேர வேலை பார்த்துக்கொண்டே, மிகச் சிறந்த மாணவராகவும் கற்றுத் தேர்ந்தார். பிறகு ஹார்வர்ட் பல்கலையில் சட்ட வல்லுநராகப் பட்டம் பெற்றார்.
Add Comment