Home » வா, பாத்துக்கலாம்: ரும்மான்
ஆண்டறிக்கை

வா, பாத்துக்கலாம்: ரும்மான்

திடீரென்று ஒருநாள், காலையில் எழுந்து பார்த்தால், கண் பார்வை முற்றாகப் போய்விடுமோ என்ற அச்சம் இந்த வருடம் கொஞ்சம் அதிகப்படியாகவே வந்து போனது. அநியாயம் சொல்லக்கூடாது, கண்களுக்கு அப்படி ஒரு வேலை வைத்த வருடம் இது. அடிப்படையில் விஞ்ஞான ஆசிரியராக இருப்பதால், எந்த ஒன்றுக்கும் மற்றவர்களை விட கூடுதலான பயம் வருவது சாதாரணமானதுதான். கண் விசயத்தில், நமது பெற்றோரின் தலைமுறை முழு ஆயுளுக்கும் பயன்படுத்திய அளவை விட, நாம் ஒரே மாதத்தில் பாவித்துத் தீர்த்து விடுகிறோம். அதிலும் இந்த ஆண்டு பாரமேற்ற பொறுப்புகள் பல, இந்தக் காரியத்தை சிறப்பாகவே செய்பவை. அதில் முதன்மையானது, மேற்படிப்புக்காக, “திரைப்படத் தயாரிப்பு” முதுமாணிக் கற்கை நெறியில் வலது காலை எடுத்து வைத்தது.

யூகேயின் வால்வஹம்டன் பல்கலைக்கழகத்துடன் இலங்கையின் மாபெரும் ஊடக வலையமைப்பு இணைந்து நடத்தும் கற்கை நெறி என்பதால், காசைப் பார்க்காமல் போய் சேர்ந்தாயிற்று. சிறு வயது முதலே, மற்றவர்கள் சொல் பேச்சுப் படி மட்டுமே படித்துப் பட்டம் பெற்று வாழ்ந்தமையால், முப்பதுக்குப் பின்னாவது, நமது ஆன்மா விரும்பும் ஒன்றைப் படிக்க வேண்டும் என்ற மறைமுக நோக்கமும் இதில் இருந்தது. கற்கை நெறி ஆரம்பித்த நாள் முதல், திரைப்பட இயக்குநர்கள், பின்னணித் தொழில்நுட்ப வல்லுநர்கள், பணக்காரப் ப்ரட்யூசர்கள் என்று, வேற்றுக் கிரகவாசிகள் பலருடன் புழங்கக் கிடைத்தது. வகுப்பில் தரும் சிறு சிறு வேலைகளை செய்யும் போது கூட, அவர்களுக்கும் எனக்குமான வித்தியாசம் தெளிவாகவே தெரிந்தது. யாருமே கதையை நம்பிப் படம் பண்ண வந்தவர்களல்ல. பெரிதாக சாதிக்க வேண்டும், மாலிவுட் இண்டஸ்றியில் வந்த புரட்சியை இலங்கைத் திரைப்படத் துறைக்கும் கொண்டு வர வேண்டும் என்று பெரிய திட்டங்களுடன் வந்தவர்கள். வகுப்பில் ஒரு திரைக்கதை எழுதச்சொன்னால், ராக்கட், ரேப், துப்பாக்கி என்று, பெரிதாகவே படைப்பார்கள். அனைவருமே துறையில் தற்சமயம் முழுநேரம் இயங்கி வருபவர்கள். சர்வதேச

திரைப்பட விழாக்களில் விருது பெற்றவர்களும் இருந்தனர். இப்படி இருக்க, வகுப்பின் ஒரே பெண்ணாக, புதுமுகமாக, திரைக்கதை எழுத வேண்டும் என்ற நோக்கத்தில் இணைந்த ஒற்றை உறுப்பினராக, அவர்களுடன் காலந்தள்ளக் கிடைத்தது வித்தியாசமான அனுபவம்.அதிலும், எனது திரைக்கதையை வகுப்பில் முன்வைத்த போது, போட்டி போட்டுக்கொண்டு ஐந்து லட்சம், ஆறு லட்சம் என்று ஆச்சரியத்துடன் அவர்கள் முதலீடு செய்யத் தயாரான போது, சரியான முடிவைத்தான் எடுத்திருக்கிறோம் என்று மனது தேறி விட்டது. வாழ்வில், தியேட்டருக்குச் சென்று பார்த்த முதல் படம் ‘பொன்னியின் செல்வன்’ என்ற தகவலை அவர்களிடமிருந்து மறைத்தே வைக்கவும் முடிவாயிற்று.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!