தனது பசியைத் தணிக்கத் துரத்துகிற புலி, தன் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஓடுகிற மான். ஓட்டம் நீளநீள இருவருமே களைப்படைகிறார்கள். தனது அந்தஸ்தைக் காப்பாற்றப் புலியும், உயிரைக் காத்துக்கொள்ள மானும் ஓடுவதை நிறுத்த முடியவில்லை. மானுக்கு தூரத்திலிருந்து ஆதரவுகள் திரள, களத்தில் இப்போது புலியும் மானும் மட்டும் போட்டியிலில்லை. காடே இரண்டுபடக் காத்திருக்கிறது.
புலியிடம் மான் ஏன் இன்னும் மாட்டவில்லை?
ரஷ்யா ஆரம்பித்தது இராணுவ நடவடிக்கையே. போர்ப் பிரகடனம் அல்ல. உலகமே உற்று நோக்குகிறது உக்ரைனை. போர்ப் பிழைகளைச் செய்து, உலகின் அனுதாபத்தை உக்ரைனுக்குப் பெற்றுத்தந்து விடக்கூடாது. ஆதலால் அதற்கேற்ற மட்டத்தில் படைகளைக் குவித்து ஆட்டத்தை ஆரம்பித்தது ரஷ்யா. நவீன ஆயுதங்கள் கைவசம் இருந்தாலும், பழைய சரக்குகளை முதலில் காலி செய்தது. சோவியத்தில் இணைந்திருந்த உக்ரைனுக்கு இந்த ஆயுதங்கள் எல்லாம் அத்துப்படி. அதுபோக மேற்குலகின் நவீன ஆயுதங்கள் கைசேர, ரஷ்யப்படையை சிதறடித்தது என்றே கொள்ளலாம். கைப்பற்றிய கெர்சனிலிருந்து கூடப் பின்வாங்கியதென்றால், வேறு என்ன சொல்ல?
good one mam..keep it up