சமூக வலைத்தளங்களில் தொடங்குகிற போராட்டம் ஓர் அரசாங்கத்தையே ஆட்டிவைப்பதாக அமையும் என்றால் நம்ப இயலுமா? 2011 ஆம் ஆண்டு துனிஷியாவில் என்ன நடந்ததோ, அதுதான் இன்று கென்யாவில் நடந்துகொண்டிருக்கிறது.
இன்றைய ஜென் Z தலைமுறைக்கு டிக் டாக் , இன்ஸ்டாகிராம் , வீடியோ கேம் இது தான் உலகம் என்று நினைத்திருப்போம். ஆனால் டிக் டாக், x (ட்விட்டர்) போன்ற சமூக வலைத்தளங்களில் தங்களது அமைதியான போராட்டமொன்றை ஒரு மாதத்திற்கு முன் ஆரம்பித்தனர் கென்யாவின் ஜென் Z. தங்கள் நாட்டை ஆளும் UDA அரசாங்கத்தை எதிர்த்து காந்திய வழியில்தான் முதலில் தொடங்கியது இந்த அமைதிப் போர்.
அரசாங்கம் இவர்களின் போராட்டத்தைக் காது கொடுத்தும் கேளாமல் நீதி மசோதா ஒன்றை அமல்படுத்த முயன்றது. அந்த மசோதாவில் அளவுக்கு அதிகமான வரிகளை மக்களுக்குத் தீட்டியிருந்தது அரசு. கென்யாவின் UDA அரசாங்கத்திற்கும், அதனை ஆளும் அதிபரான ரூடோவிற்கும் அன்று பிடித்தது சனி. பொறுமையாகப் போராடிய ஜென் Z, ஒரு கட்டத்தில் கொந்தளித்து பாராளுமன்றத்திற்குச் சென்று, அதன் ஒரு பகுதிக்குத் தீயிட்டனர். இக்கலவரத்தை அடக்க அரசாங்கம் ராணுவத்தை இறக்கியது. இதில் குழந்தைகள் உட்பட 41 பேர் இறந்துள்ளனர். அறுநூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர், சுமார் ஐந்நூறு மக்களுக்குக் காயம். இன்று வரை போராட்டம், கலவரம் தொடர்கிறது.
Add Comment