43 ரெபல்
சோலாப்பூரிலிருந்து கிளம்பிய கொஞ்ச நேரத்திலேயே பள்ளியைப் போன்ற கட்டடத்தில் ரேலி நிறுத்தப்பட்டது. எப்போதும் சாலையில் கொடுக்கப்படும் சிற்றுண்டி என்ன கட்டடத்தில் வைத்துக் கொடுக்கப்படுகிறது என்று அத்துலிடம் கேட்டான். அங்கேதான் தங்கப்போகிறோம் என்று வந்த பதில் வியப்பாக இருந்தது. மகாராஷ்ட்ரா என்னதான் பாபாவின் மாநிலமாக இருந்தாலும் அதற்காக 20, 30 கிலோமீட்டர் இடைவெளிகளிலெல்லாம் நிறுத்தித் தங்கவேண்டுமா எனத் தோன்றியது. எனினும் சுதீரிடம்கூடக் கேட்டுக்கொள்ளவில்லை.
சோற்றைப் போட்டு ஊரைக் காட்டுகிறார்கள் என்று நாம் வந்திருப்பதைப்போல அவர்களுக்கு என்ன விசேஷ காரணங்கள் இருக்கக்கூடுமோ என்று எண்ணிக்கொண்டான். மகாராஷ்ட்டிரா முழுக்கவே பாபா எங்கள் ஊரில் தங்கவேண்டும் என்று சின்னச் சின்ன ஊர்களிலும் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்பது பின்னால்தான் தெரியவந்தது. இருக்கிற மாநிலங்களிலேயே மகாராஷ்ட்ராவில்தான் அதிக நாட்கள் ரேலி போகப்போகிறது என்று கன்யாகுமரியிலேயே கேள்விப்பட்டிருந்தான்.














Add Comment