Home » சலம் – 23
சலம் நாள்தோறும்

சலம் – 23

23. கள்வன்

சாரனின் சிந்தையில் சூத்திர முனி திருத்தியும் விரித்தும் எழுதிய அந்தச் சம்பவத்தை மிகுந்த ஆர்வத்துடன் படித்துப் பார்த்தேன். நான் அதர்வன். எங்கிருந்தாலும் எந்தப் பணியில் இருந்தாலும் என் கவனத்தின் ஒரு பகுதி அவனது இருப்பிலும் செயல்பாட்டிலும்தான் மையம் கொண்டிருக்கும். ஒரு விதத்தில் அது எனக்குத் தேவையும்கூட. என்னுடன் இருந்த நாள்களில்கூட நான் வருந்திக் கேட்டாலும் அவன் எதையும் விரித்துச் சொல்ல மாட்டான். ஒரு வரியில் ஒரு பதில். அல்லது ஒரு சொல்லில் அவனது உள்ளக் கிடக்கை. எனக்கு அது போதும் என்பது அவனது தீர்மானம். சரி, அவனது அகங்காரம் மண்டியிட விரும்பாத எல்லையில் நான் இருப்பது என் பிழையல்ல என்று நினைத்துக்கொள்வேன்.

ஆனால் உண்மைகளை அவன் சேகரித்துக் கோத்து வைக்கும் விதத்தின்மீது எனக்கு எப்போதும் ஈர்ப்புண்டு. அவன் உணர்ச்சிமயமானவன்தான். அதில் ஐயமில்லை. ஆனால் தருணங்களைச் சேமிக்கும்போது கவனமாக உணர்ச்சிகளை அவன் தவிர்ப்பது வழக்கம். அன்றைக்கு நானில்லாத நாளில் பிராமணர்கள் என் பர்ணசாலைக்கு அருகே அவனை ஒரு மரத்தில் கட்டி வைத்து விழுதுகளால் நையப் புடைத்திருக்கிறார்கள். சரஸ்வதியின் புனிதத்தை அவன் கெடுத்துவிட்டான் என்பது பிராது.

‘மகரிஷியே, அவனொரு மாயாவி. நீரின்மீது நடந்து சென்று அதனை அவன் நிரூபித்துவிட்டான். இதற்குமேலும் அவன் இங்கே இருப்பது நமது குலத்தையே சர்வநாசமாக்கிவிடும். அவனை அனுப்பிவிடுங்கள்’ என்று அவர்கள் என்னிடம் வந்து சொன்னார்கள்.

‘அதனைப் பிறகு பார்த்துக்கொள்ளலாம். நீங்கள் அவனைக் கட்டி வைத்துப் புடைத்ததற்கு பதிலாக அவன் உங்களை ஏதாவது செய்தானா அல்லது சொன்னானா?’

அவர்கள் சில கணப் பொழுதுகளை எடுத்துக்கொண்டு யோசித்துவிட்டு இல்லை என்று சொன்னார்கள்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!