57. நாமகரணம்
மூன்றடி இடைவெளியில் அவனுக்கு எதிரே அமர்ந்திருந்தேன். அவனது உயரம் என்னைச் சிறிது கலைத்துக் கலைத்து ஆடிக்கொண்டிருந்தது. இயல்பில் நான் கட்டுமஸ்தான தோற்றத்தில்தான் இருப்பேன் என்றாலும் வளர்ந்துகொண்டிருந்த காலத்தில் யாரோ உச்சந்தலையில் கையை வைத்து அழுத்தி, நிறுத்தினாற்போலக் காட்சியளிப்பதாக என் சகோதரி ஒருமுறை சொல்லியிருக்கிறாள். அது அப்போது நினைவுக்கு வந்தது. அவனுக்கு எதிரே, அவனது மார்பளவு உயரம்தான் இருந்தேன். சரி, அதற்கெல்லாம் கவலைப்பட்டு இனிப் பயனில்லை. அவரவர் உயரம் அவரவருக்கு.
‘சொல், ரிஷியே. ஏதோ சொல்வதாகச் சொன்னாய்’ என்று நானே தொடங்கிவைத்தேன்.
‘நீ அக்ஷரம் என்றால் என்னவென்று கேட்டாய்.’
‘ஆம். நீ அதற்கு பிரகிருதி என்று பதில் சொன்னாய்.’
‘இரண்டும் ஒன்றுதான். அக்ஷரம் அல்லது பிரகிருதி என்பது படைப்புக்கு முந்தைய நிலை.’
Add Comment