சேலம் கிழக்குதொடர்ச்சி மலைகளால் சூழப்பட்டஒரு மாவட்டம்.வடக்கே சேர்வராயன்மலை, தெற்கே ஜருகுமலை, கிழக்கே கோதுமலை,
தென்மேற்கே கஞ்சமலை என கிட்டத்தட்ட நான்கு எல்லைகளிலும் மலைகள் அமைந்த மாவட்டம். அதனால்தான் சேலத்து மாவட்டக்காரர்கள் கெத்தாக சொல்வார்கள்- மாவட்டத்தின் மையத்தில் இருந்து நாங்கள் எந்த பக்கம் போனாலும், எண்ணி முக்கால்மணிநேரப் பிரயாணத்தில் ஒரு மலைமீது ஏறி சிகரத்தைத் தொடுவோம். சிகரத்தைத் தொட்டு விண்ணை அளப்போம். -இது மிகையில்லை… ஏனெனில் அந்த அளவுக்கு மலைவளம் உள்ள மாவட்டம் இது.
நான்கு பக்கமும் மலைகள் இருந்தாலும் வடக்குப் பக்கம் சேர்வராயன் மலையில் அமைந்துள்ள ஏற்காடு மிகப்பிரசித்தம். சீதோஷ்ணம், தங்குமிடம், உணவு வசதிகள், சுற்றிப் பார்க்க ஏராளம் என்று அமைந்திருக்கும் வாய்ப்புக்கள் எல்லாமே தமிழ்நாடு மக்களை மட்டுமின்றி கேரளா, கர்நாடக மாநிலத்து மக்களையும் இழுத்து வெளுத்து வாங்குகிறது ஏற்காடு. சேலத்தின் பெருமைகளில் ஒன்று ஏற்காடு.
அந்த ஏற்காடுக்கு இணையான, இன்னும் சொல்லப்போனால் அதைவிடவும் சிறந்த சீதோஷ்ண அமைப்பு, இயற்கை வளம்(இன்னும் அதிகம்பேர் போகாததால் பொல்யூஷன் ஆகாத நிலை) கொண்ட ஜருகுமலை சேலத்தின் தெற்குப் பக்கம் உள்ளது.
Add Comment