ii. குங்ஃபூ
‘மனித உழைப்பு’ என்பது குங்ஃபூவுக்கு இணையான தமிழ்ச்சொல்.
நகைச்சுவையாகச் சொல்வதென்றால், சீனாவில் தோன்றி உலகம் முழுவதும் பரவி நிற்பது உணவு வகையில் ஃப்ரைடு ரைசும் சண்டைக்கலையில் குங்ஃபூவும்.
போதிதர்மர் சீனாவுக்குச் சென்று ஷாவோலின் குங்ஃபூவைக் கற்றுக்கொடுத்த வரலாற்றுக்கு முன்பும் சீனாவில் குங்ஃபூ சண்டைக்கலை இருந்தது. அதில் பல உத்திகளையும் நுட்பங்களையும் உருவாக்கி போதிதர்மர் நவீனப்படுத்தினார்.
மஞ்சள் பேரரசர் என அழைக்கப்படும் ஹுவாங்க்டியின் காலகட்டம் கி.மு. இரண்டாயிரத்து அறுநூறுகளில் தொடங்குகிறது. சீனாவில் ஆவணப்படுத்தப்பட்ட தற்காப்புக்கலையும் இந்தக் காலகட்டத்தில்தான் தொடங்கப்பட்டது. ஷாவோலின் ஆலயத்தில் குங்ஃபூ பயிற்சி பெறப்பட்டது. வழிவழியாகத் தொடர்ந்த குங்ஃபூ சண்டைக்கலையைக் கொண்டு ஷாவோலின் ஆலயத்தினர் உள்நாட்டுக் குழப்பங்களிலிருந்து ஆலயத்தைக் காத்தனர். குங்ஃபூ சண்டைக்கலை அவர்களுக்குப் பெரிதும் உதவியது.
Add Comment