தமிழ்த் திரைப்படச் சண்டைக்காட்சிகள்
திரைப்படத்தில் சண்டைக்காட்சிகளின் வெற்றி என்பது அந்தச் சண்டையுடன் இணைந்த கதாநாயக வெற்றி. இதுவும் சண்டைக்கலை உத்திகளும் சரிவிகிதத்தில் கலந்து திரைப்படங்களில் இடம்பெற்ற சண்டைக்காட்சிகளில் பெருமளவு பேசப்பட்டன. குறிப்பிட்ட சண்டைக்காட்சியில் குடும்ப சென்டிமென்ட், ஊர்ப்பெருமை, கதாநாயகனின் பொறுமை வெடிப்பது போன்றவை கைகோத்தால் திரையில் கதாநாயகன் எதிரியை வீழ்த்துவதை ரசிகர்கள் கொண்டாடித் தீர்க்கின்றனர்.
கதாநாயகன் – வில்லன் என்னும் எதிர் துருவ மோதல்களுக்கும் மேல் ரசிகர்கள் அந்தச் சண்டைக்கான ஆழமான காரணத்தையும் எதிர்பார்க்கிறார்கள்.
எடுத்துக்காட்டாக, பாஷா திரைப்படத்தில் வரும் ரஜினிகாந்த், ஆனந்த்ராஜ் குழுவினரின் சண்டைக்காட்சி. இதை அமைத்த சண்டைப்பயிற்சியாளர், ராஜா. இந்தச் சண்டையின் வெற்றியை அதற்கு முன் கதையில் நடந்தவை அக்காட்சியை உயர்த்திக் காட்டின.
Add Comment