நுட்பம் நிறைந்த சண்டை
தமிழ்த் திரையில் முக்கியமான சண்டைக்காட்சிகளைப் பட்டியல் இட்டால் அதில் மாநாடு திரைப்படத்தில் திருமணமண்டபத்தில் நடக்கும் சண்டைக்காட்சி கண்டிப்பாக இடம்பெறும். காரணம், கதையமைப்பின்படி ஒவ்வொரு காட்சியமைப்பும் திரும்பத் திரும்ப ஓடுகையில் வெவ்வேறாக மாறிக் கதையின் போக்கு திரும்பும். அதைப் போலவே, இந்தச் சண்டையும் குறிப்பிட்ட நேரம் நடந்ததும் வருகின்ற வீச்சில் கதாநாயகன் தாக்கப்படும் காட்சியில் சண்டை நிறுத்தப்பட்டு, மீண்டும் விட்ட இடத்திலிருந்து தொடங்கும்போது, வீச்சிலிருந்து கதாநாயகன் தப்பிக்க வேண்டும்.
கதாநாயகன் கொல்லப்படுவதற்காக வீசப்படும் ஒவ்வொரு வீச்சும் டைம்லூப்பிற்காக அங்கேயே நிறுத்தப்படும். மீண்டும் அதே வீச்சு படமாக்கப்பட்டு, அந்த வீச்சைக் கதாநாயகன் தவிர்த்து அல்லது எதிர்கொண்டு உயிரோடிருக்கவேண்டும், சண்டையும் தொடர்ந்து நடக்கவேண்டும். ஒவ்வொரு தாக்குதலும் திரும்பத்திரும்பக் காட்டப்பட்டபோது இந்தத் தாக்குதலை எந்த உத்தியால் தடுத்துக் கதாநாயகன் உயிரோடு இருக்கப்போகிறான் என சண்டைக்காட்சி ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறவைத்த காட்சியமைப்பு.
மாநாடு திரைப்படத்தில் நுட்பம் நிறைந்த இந்த சண்டைக்காட்சியை சிம்புவுக்கு அமைத்தவர் ஸ்டண்ட் சில்வா.
Add Comment