iii. ரோம், கிரேக்கம்
சமகால விளையாட்டுப் போட்டிகளில் இடம்பெறும் மற்போரின் வகைகள் இரண்டு. ஒன்று ‘ஃப்ரீ ஸ்டைல்’ மற்போர் எனப்படும். இன்னொன்று ‘கிரீக்கோ-ரோமன்’ மற்போர் எனப்படும்.
கிரீக்கோ-ரோமன் என்னும் பெயரிலிருந்தே இந்த வகை மற்போர் ரோமானிய கிரேக்கப் பகுதிகளிலிருந்து வந்திருக்கலாம் என்பது தெரிகிறது. கிரீக்கோ-ரோமன் மற்போருக்கு அசாத்திய உடல் பலமும் நுட்பமும் தேவை. ஏனென்றால் பிடிகளால் நடக்கும் மற்போரில் இடுப்புக்குக் கீழே பிடிகள் இடுவதும் கால்களால் பிடிகளை இடுவதும் கிரீக்கோ-ரோமனில் அனுமதிக்கப்படவில்லை. ஃப்ரீ ஸ்டைலில் மட்டுமே கால்களைப் பிடிப்பதும், கால்களால் பிடிப்பதும் அனுமதிக்கப்படுகிறது.
ஒலிம்பிக்கில் நாம் காண்பது பெரும்பாலும் ஃப்ரீஸ்டைல்.
Add Comment