Home » சங்கரா! சங்கரா!
ஆன்மிகம்

சங்கரா! சங்கரா!

தென்காசி மாவட்டம், சங்கரன்கோயில் ஊரில் அமைந்துள்ளது சங்கரநாராயணர் திருக்கோயில். சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையான திருத்தலம். சிவனும் ஹரியும் ஒன்றுதான் என்னும் சைவ-வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டு இந்தக் கோயில். இறைவன் சங்கரலிங்கம் – சங்கரநாராயணர், இறைவி கோமதி அம்மன் என்கிற ஆவுடையம்மன்.

இந்தக் கோயில் மூன்று தனித்தனி பிரகாரங்களைக் கொண்டுள்ளது. கோவிலுக்குள் நுழைந்த உடன் இடமிருந்து வலமாக, முதலாவதாக சங்கரலிங்க சுவாமிக்குத் தனிச் சந்நிதி உள்ளது. வலப்புறம் கடைசியில் கோமதி அம்மனாக அம்பாளுக்குத் தனிச் சந்நிதி. இந்த இரண்டு சந்நிதிகளுக்கும் மத்தியில் சங்கரநாராயணருக்கு தனிச் சந்நிதி அமைந்துள்ளது. ஒவ்வொரு சந்நிதியிலும் தனித்தனி மண்டபம், கொடிமரம், பலிபீடம்.

ஆணும் பெண்ணுமாய் இணைந்துள்ள அர்த்தநாரீஸ்வரரை வணங்கிப் பழக்கப்பட்டவர்களுக்கு சங்கரனும் நாராயணனும் இணைந்த திருக்கோலம் சற்று புதிதுதான். கிழக்கு நோக்கி அமைந்துள்ள சங்கரநாராயணரின் திருவுருவத்தில் வலதுபுறத்தில் பாதி சிவனாகவும், இடதுபுறத்தில் பாதி திருமாலாகவும் வணங்கப்படுகிறது. சிவபெருமானைக் குறிக்கும் வலதுபுறம் சிவப்பு வண்ணம் அல்லது சந்தனம் பூசப்படுகிறது. கற்சிலையில் திருமாலுக்குரிய சியாமளம் இயல்பாகவே இருப்பதினால் இடதுபுறம் அப்படியே விடப்படுகிறது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!