பிப்ரவரி மாதம் முதல் நாள். சர்வம் தனது ஏஐ அறிவிப்புகளை வெளியிடத் தொடங்கியது. சர்வம் ஒரு ஸ்டார்ட்-அப் நிறுவனம். பெங்களூருவைச் சேர்ந்தது. ஏஐயை உற்றுநோக்குபவர்களைத் தவிரப் பிறர் சர்வத்தை அறிந்திருக்க வாய்ப்பில்லை.
பிப்ரவரி வளர வளர சர்வத்தின் பெயர் பிரபலமடையத் தொடங்கியது. ஏஐ உச்சி மாநாட்டையொட்டித் தங்கள் அறிவிப்புகளை ஒவ்வொன்றாக வெளியிட்டுக்கொண்டிருந்தார் அதன் நிறுவனர் பிரத்யுஷ் குமார். இவரும் விவேக் ராகவன் என்பவரும் இணைந்து சர்வம் நிறுவனத்தைத் தொடங்கினர். பிரத்யுஷ், ஓங்கி உலகளக்கும் ஓப்பன் சோர்ஸ் துறை வித்தகர். ராகவன் டிஜிட்டல் கட்டமைப்பு நிபுணர்.
சர்வம் தொடங்கப்பட்டபோது இவர்களை ஆதரித்தவர்களைவிட விமர்சனம் செய்தவர்களே மிக அதிகம்.
சர்வம் என்ன செய்ய முனைகிறது என்று தெரிந்துகொள்வோம். அதற்கு முன் இந்திய ஏஐ சூழல் பற்றிய ஒரு சிறிய அறிமுகம்.
ஏஐ பயன்பாட்டில் இந்தியா முன்னணியில் இருக்கிறது. எண்ணிக்கை அடிப்படையில் மட்டுமல்ல, பலதரப்பட்ட சேவைகளுக்கு ஏஐயைப் பயன்படுத்துவதிலும்.















Add Comment