காங்கிரஸின் அடுத்தத் தலைவர் பொறுப்புக்கு சசி தரூர் போட்டியிடும் வாய்ப்பு அதிகம் என்று தெரிகிறது. சோனியா கைகாட்டும் வேட்பாளருக்கு எதிராக நின்று அவர் வெல்வாரா என்பது சந்தேகத்துக்குரியதாக இருந்தாலும் சசி தரூரின் தகுதிகளில் பழுது கிடையாது. மிக நிச்சயமாக, ராகுலைக் காட்டிலும் அவர் திறமைசாலி என்பதில் சந்தேகமில்லை.
பிரிட்டனில் உள்ள ஆக்ஸ்ஃபோர்டு ஒன்றியம் என்ற பாரம்பரிய அமைப்பு ஒன்றில் பேசுவதற்காக 2015 மே மாதம் சசி தரூர் அழைக்கப்பட்டிருந்தார். பங்கு கொண்டவர்கள் மொத்தம் எட்டுப் பிரபலங்கள். வேறு வேறு நாட்டுப் பெருந்தலைகள். தரூர், எட்டில் ஒருவர். அப்போது அவர் திருவனந்தபுரம் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர். ‘பிரிட்டன் தனது முன்னாள் குடியேற்றங்களுக்கு இழப்பீடுகள் வழங்கக் கடமைப்பட்டிருக்கிறது’ என்று அன்றைக்கு தரூர் பேசினார். மொத்தப் பேச்சின் சாரமும் இந்த ஒரு வரியை ஒட்டி அமைந்ததுதான்.
சசிதரூர் தேவை.காங்கிரஸ் உயிர் பெறும்