Home » சாத்தானின் கடவுள் – 10
சாத்தானின் கடவுள் தொடரும்

சாத்தானின் கடவுள் – 10

10. கடவுளும் கடவுள்களும்

கடவுளைக் குறித்து அதிக அளவில் யோசித்த, அதே அளவுக்குப் பேசிய முதல் பிரதி என்று ரிக் வேதத்தைச் சொல்லலாம். கவனிக்க. கடவுளைக் குறித்துத்தான். அவனைக் குறித்தோ அல்லது அதனைக் குறித்தோ அல்ல. ‘அவன்’ என்பது கடவுள்தான் என்று ஒரு வாதத்துக்குக் கொள்வோமானால் ஒரு நபரா, பலரா என்பது முதல் வினாவாக இருக்கும். கடவுள் ஒருவனே என்னும் கருத்தாக்கத்தையும் அதனை அடியொற்றிய மதங்களையும் பிறகு பார்க்கலாம். முதலில் நமக்கு நெருக்கமான பஞ்சாயத்தைப் புரிந்துகொள்ள முடிகிறதா என்று பார்க்க வேண்டுமல்லவா?

ரிக்வேதத்தைச் சிறிது கூர்ந்து கவனித்தால் இரண்டு நிலைபாடுகளும் அதில் இருப்பதைப் பார்க்கலாம்.

1. கடவுள் ஒருவனே.
2. ஒன்றல்ல, பல.

மிக எளிமையாகப் புரிந்துகொள்ளக்கூடிய காரணம், ரிக் வேதம் என்பது ஒரு நபரால் இயற்றப்பட்டதல்ல. ஏராளமான கவிகளால் புனையப்பட்டது. அவர்களும் பல நூறாண்டு கால இடைவெளியில் வாழ்ந்தவர்கள். பிற்பாடு அதனை ஒரே பிரதியாகத் தொகுத்தவர்கள், இந்த விஷயத்தில் குழப்பம் வராதிருப்பதற்கு இரண்டு ஜன்னல்களை அதில் பொருத்தினார்கள்.

முதலாவது, பிரிவுகள் என்னும் ஜன்னல். அதாவது, கடவுள்களின் பிரிவுகள்.

1. விண்ணுக்குரிய கடவுள்கள் (வருணன், மித்திரன்)

2. மண்ணுக்குரிய கடவுள் (அக்னி)

3. வளி மண்டலக் கடவுள் (வாயு, இந்திரன்)

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



உங்கள் எண்ணம்

  • மீண்டும் ஒரு சமரசமில்லாத, தர்க்கப்பூர்வமான அத்தியாயம்.
    சைவ, வைணவ, இஸ்லாமிய, கிறித்தவ மதங்களுக்கு முன்தோன்றி செல்வாக்குடன் விளங்கிய புத்த, சமண மதங்கள் இறையச்சம் என்ற ஒன்றை வற்புறுத்தியதாகத் தெரியவில்லையே சார். பின்னால் தோன்றிய மதங்களுக்கு ஏன் அந்தக் கட்டாயம் வந்தது எனத்தெரியவில்லையே.

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!