பொருளாதாரம் சர்வதேசமயமாக்கப்பட்டபின் வைரஸ்களும் பாக்டீரியாக்களும் கூட பொதுச்சொத்தாகிவிட்டன. அந்த வகையில் உலகின் எந்தப் பகுதியில் ஒரு புது வைரஸ் வந்தாலும், எல்லாருக்கும் கிலி வந்துவிடுகிறது. கோவிட் தொற்றுநோய் வந்து ஓர் ஆட்டம் காட்டியபின், லேசாகக் காய்ச்சல் வந்தாலும் சந்தேகம் வந்துவிடுகிறது. தற்போது அமெரிக்காவில் குளிர்காலம் என்பதால், இது ஃப்ளூ சீசன். அதோடு நோரா வைரஸ் காலம்.
ஸ்க்ரப் டைபஸ் (scrub Typhus) என்பது ஆசியா பசிபிக் கடற்கரையோரம் காணப்படும் ஒரு நோய். வழக்கமாக பாகிஸ்தான், இந்தியா, சீனா, தாய்நாலந்து, ஶ்ரீலங்கா போன்ற நாடுகளில் பரவும்.
இது அடர் காடுகளில் மலையோரப் பகுதிகளில் இருக்கும் பூச்சிகள், லார்வாக்களின் கடியால் வருவது. பூச்சிக்கடியால் தோல் தடித்துச் சிவந்து இருக்கும். அரிப்பு. அதனால் சொறிதல். பின் ஜுரம் வரும். பிறகு நிமோனியா, மண்ணீரல், கல்லீரல் ஆகிய உறுப்புகள் பாதிக்கப்படலாம். எனவே உடனுக்குடன் சிகிச்சை எடுத்துக்கொள்வது நல்லது.
தலைவலி, தசை வலி, குளிருடன் கூடிய காய்ச்சல், சிராய்ப்பு, தேமல், குழம்பிய மன நிலை போன்றவை நோய்க்கான அறிகுறிகள். சிலருக்குக் கல்லீரல் தொடர்புடைய உயிர்வேதியியல் பொருட்களில் இரத்த அளவுகள் மாறக்கூடும். அதாவது, பிலிரூபின் ஆகியன. சிலருக்கு மண்ணீரல் தொடர்புடைய அளவுகள் மாறும்.
நுரையீரல் பாதிக்கப்பட்டால், மூச்சுவிடக் கடினமாகி நிமோனியா வரலாம். இறக்கக் கூட நேரிடலாம். மிகவும் மோசமான நிலையில் கோமா ஏற்படவும் வாய்ப்புண்டு.
Add Comment