பெரிய உணவகங்களில் மனிதர்களுக்குப் பதிலாக ரோபோக்கள் உணவு பரிமாறுவது பிரபலமாகிக் கொண்டிருக்கிறது. வாடிக்கையாளர்களைக் கவரவும் ஒரே நிறுவனத்தில் தொடர்ந்து நீண்ட நாட்கள் பணிபுரியும் விசுவாசமான பணியாளர்களுக்கான பற்றாக்குறையைப் போக்கவும் மனிதர்களுக்குப் பதிலாக ரோபோக்களை உபயோகப்படுத்துவதாக உணவக நிர்வாகிகள் கூறுகிறார்கள்.
ரோபோ பணியாட்கள் பற்றியும் அவை உணவகங்களில் எப்படி வேலை செய்கின்றன என்பது பற்றியும் தெரிந்துகொள்ள ரோபோ சேவை வழங்கும் ஓர் உணவகத்துக்குச் சென்று பார்த்தோம்.
1971-ஆம் ஆண்டு ராஜு என்பவர் கோவை கிராஸ்கட் சாலையில் ஹரி பவனம் அசைவ உணவகத்தைத் துவங்கினார். ஐம்பத்தி மூன்று ஆண்டுகளில் கோவையில் எட்டுக் கிளைகள் மற்றும் திருப்பூர், அவிநாசியில் ஒரு கிளை என ஹரி பவனம் உணவகம் வளர்ந்திருக்கிறது. தற்போது ராஜுவின் மகன் பாலசந்தர் ஹரி பவனம் கிளைகளை நிர்வகிக்கிறார்.
வேறு எந்த ஹோட்டல்களில் ரோபோ பணியாளர்கள் இருக்கிறார்கள் என்பதையும் குறிப்பிட்டு இருக்கலாம்.