பாகிஸ்தானின் அரசியலில் இருந்து பிரிக்க முடியாதவை இரண்டு. ராணுவம், சர்வாதிகாரம். அந்நாட்டில் அரசியல்வாதிகள் என்றால் பொம்மைகள் என்ற மறைமுக அர்த்தமும் உண்டு. என்ன ஒன்று, மக்களுக்கு அது நேரடியாகவே தெரியும்.
என்றாலும், பெயரளவில் பாகிஸ்தான் ஒரு ஜனநாயக நாடு. அரசியலமைப்புச் சட்டப்படி அது ஒரு பிரதமரால் ஆளப்பட வேண்டும். அதன்படி இப்போதைய பாகிஸ்தான் பிரதமராக ஷாபாஸ் ஷெரிப் இருக்கிறார்.
இவர் அந்நாட்டின் முன்னாள் பிரதமரான நவாஸ் ஷெரிப்பின் உடன் பிறந்த தம்பி. பணக்கார வணிகக் குடும்பத்தில் பிறந்தவர். மூன்று முறை பாகிஸ்தான் பஞ்சாப் மாநில முதல்வராகவும், தனது அண்ணனால் தொடங்கப்பட்ட பாகிஸ்தான் முஸ்லிம் லீக் – PML(N) கட்சியின் தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.
இரண்டு முறை பாகிஸ்தான் பிரதமராகவும், ஒருமுறை நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்துள்ளார். 1999இல் பர்வேஸ் முஷாரப் நிகழ்த்திய ராணுவப் புரட்சியின்போது வலுக்கட்டாயமாக சவுதி அரேபியாவுக்கு நாடு கடத்தப்பட்டார்.














Add Comment