ஷார்ஜாவின் நாற்பத்திரண்டாவது சர்வதேச புத்தகக் காட்சி நவம்பர் ஒன்றாம் தேதி தொடங்கியுள்ளது. பன்னிரண்டு நாள்கள் நடக்கவிருக்கும் இந்த நிகழ்வை ஷார்ஜாவின் அரசர் ஷேக் சுல்தான் அல் காஸ்மி திறந்து வைத்தார்.
1982-ஆம் ஆண்டு தொடங்கிய புத்தக காட்சியைப் பார்த்திருந்த அன்றைய பள்ளி மாணவனான ஒருவரிடம் பேசினோம்.
“இரண்டு மூன்று கூடாரங்கள் போட்டு இருந்தார்கள். பதிப்பாளர்கள் என்று யாரும் இல்லை. எங்கள் அரசர் புத்தகங்களை வாங்கி எங்களுக்காகப் புத்தகக் காட்சியை ஆரம்பித்து வைத்தார். அன்று அவர் விதைத்த விதை இன்று ஆலமரமாக வளர்ந்திருப்பதைப் பார்த்து மகிழ்வாக இருக்கிறது. மேலும் வாசிப்பு என்பது எங்கள் மக்களின் ஓர் அங்கமாகி விட்டது” என்றவர், டிராலி நிறையப் புத்தகங்களைத் தள்ளிக் கொண்டு வந்த பேரனோடு வெளியேறினார்.
லட்சக்கணக்கானோர் வரும் இடத்தில் நெரிசலுக்கு இடமேயில்லாத வகையில் சிறப்பான பார்க்கிங் வசதிகள் இருக்கின்றன. சென்ற முறை ‘ஒபன் புக்ஸ் ஓபன் மைண்ட்ஸ்’ என்ற வாசகத்தை முன்னிறுத்தி நடந்தது. இந்த முறை ‘வீ ஸ்பீக் புக்ஸ்’ என்ற வாசகத்தை வைத்து ஆரம்பமானது. வாசிப்பை மக்களிடம் எப்படிக் கொண்டு செல்கிறார்கள் என்பதற்கு இந்தக் காட்சி ஒரு சாட்சி.
Add Comment