Home » மாண்டியலின் விதவை
இலக்கியம் உலகச் சிறுகதைகள்

மாண்டியலின் விதவை

கேப்ரியேல் கார்சியா மார்கேஸ்
ஆங்கிலத்தில்: J.S. Bernstein
தமிழில்: தி. அ. ஶ்ரீனிவாசன் (அச்சுதன் அடுக்கா)
புனைவு என்னும் புதிர் கட்டுரை: விமலாதித்த மாமல்லன்


ஜோஸ் மாண்டியல் இறந்தபோது அவரது மனைவியைத் தவிர எல்லோரும் வஞ்சம் தீர்க்கப்பட்டதாக உணர்ந்தார்கள். ஆனால், அவர் உண்மையிலேயே இறந்துவிட்டார். என்று நம்புவதற்கு எல்லோருக்கும் நிறைய நேரமாயிற்று. அனேகம்பேருக்கு, புழுக்கம் நிறைந்த அந்த அறையில், மூலாம்பழம் போன்று உருண்டு திரண்ட பக்கங்களைக் கொண்ட ஓர் மஞ்சள் நிறச் சவப்பெட்டியில், தலையணை மற்றும் பருத்தி விரிப்புகளோடு கிடத்தப்பட்டிருந்த பிணத்தைப் பார்த்த பின்பும் கூட சந்தேகம் தீரவில்லை. அவர் சுத்தமாக முகச்சவரம் செய்யப்பட்டிருந்தார். பளபளப்பான தோல் பூட்சுகளும் வெள்ளை உடையும் அணிவிக்கப்பட்டிருந்தார். இந்த கணம்போல உயிர்த்துடிப்புடன் என்றும் இருந்ததில்லை என்பதுபோல காட்சியளித்தார் அவர். இது எல்லா ஞாயிற்றுக்கிழமைகளிலும் எட்டுமணித் தொழுகைக்குப் பிரசன்னமாகும் அதே திரு. சேப் மாண்டியல்தான்; சவாரிச் சாட்டையை வைத்திருக்கும் கையில் ஒரு சிலுவையை வைத்திருந்தார் என்பதைத் தவிர. சவப்பெட்டி மூடி இறுக்கப்பட்டு, அலங்கரிக்கப்பட்ட அவர்களின் குடும்பக் கல்லறையில் வைத்து மூடப்பட்ட பிறகுதான் முழு நகரமும் அவர் இறந்தவர்போல் நடிக்கவில்லை என்பதை நம்பியது.

சவ அடக்கத்திற்குப் பிறகு, அவரது விதவையைத் தவிர வேறு எவராலும் நம்ப முடியாமலிருந்த ஒன்று அவர் இயற்கையாகத்தான் இறந்தார் என்பது. மறைமுகத்தாக்குதல் ஒன்றில் பின்புறமாகச் சுடப்பட்டு இறப்பார் என்று ஒவ்வொருவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தபோது, அவரது மனைவி மட்டும் அவர் ஒரு நவீன காலத் துறவி போல, மூப்படைந்து, எந்த வலியுமில்லாமல், பாவ மன்னிப்பு எடுத்துக் கொண்டு அவரது படுக்கையிலேயே இறக்கப் போவதை தான் பார்க்கப் போகிறோம் என்பதில் உறுதியாக இருந்தாள். மிகச் சில விவரங்களில் மட்டுமே அவன் தவறியிருந்தாள். ஜோஸ் மாண்டியல் 1951 ஆகஸ்டு இரண்டாம் தேதி பகல் இரண்டு மணிக்கு அவரது, மருத்துவர் கூடாதென்றிருந்த|கோபாவேசத்தின் காரணமாக தனது படுக்கையில் மாண்டார். அவரது மனைவி முழு நகரமுமே அஞ்சலி செலுத்த வருகை தருமென்றும் தனது வீடு கொள்ளாது பூக்கள் நிரம்பும் என்றும் நம்பிக் கொண்டிருந்தாள். மாறாக, அவரது கட்சி மற்றும் ஆன்மிகத் தோழமைச் சங்க உறுப்பினர்கள் மட்டுமே வந்திருந்தார்கள். அவள் பெற்றுக்கொண்ட அஞ்சலிச் சரங்கள் நகராட்சியிலிருந்து அனுப்பப்பட்டவை மட்டுமே அயல்நாட்டுப் பிரதிநிதியாக ஜெர்மனியிலிருந்த அவரது மகனும், பார்ஸிலிருந்த இரண்டு மகள்களும் மூன்று பக்கத்திற்கு தந்தி அனுப்பினார்கள். தந்தி அலுவலகத்து மையை அதிகமாகச் செலவழித்து, தின்றுகொண்டே அவர்கள் அதை எழுதியிருக்க வேண்டும் என்பதையும் இருபது டாவருக்குள் வரும் வார்த்தைகளைக் கண்டுபிடிப்பதற்கு முன் நிறைய தந்திப் படிவங்களை அவர்கள் கிழித்திருப்பார்கள் என்பதையும் ஒருவரால் கண்டுகொள்ளமுடியும். யாருமே வருவதாக வாக்களிக்கவில்லை. அந்த இரவில், தனது அறுபத்திரண்டாவது வயதில், அவளைச் சந்தோஷப்படுத்திய மனிதன் ஓய்வெடுத்த தலையணையில் விழுந்து,அழுதுகொண்டிருந்தபோதுதான் முதல்முறையாக மாண்டயலின் விதவை விரக்தியில் சுவையை அறிந்தாள். நான் என்னை நிரந்தரமாக அடைத்துக்கொள்வேன் என்று எண்ணமிட்டான் அவள். என்னைப் பொறுத்தவரையில் ஜோஸ் மாண்டியல் இடப்பட்ட அதே பெட்டியில் நானும் இடப்பட்டது போலத்தான். இந்த உலகத்தைப் பற்றி அதிகமாக எதுவும் அறிந்துகொள்ள நான் விரும்பவில்லை.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!