Home » காம்ரேட் சீதா
ஆளுமை

காம்ரேட் சீதா

கடந்த சில வருடங்களாகவே, சீதாராம் யெச்சூரியும் ராகுலும் அடிக்கடி இணைந்தே காணப்பட்டனர். ராகுல், அவரின் அறைக்குச் சென்று நெடுநேரம் பேசுவது, எப்போதும் உடனிருப்பது அவர்களது அன்றாடம் ஆனது. ஒரு கட்டத்தில் இரண்டு கட்சிகளுமே இது குறித்து முணுமுணுக்க ஆரம்பித்தன. ‘யெச்சூரிக்கு அவர் கட்சியில் கூட இத்தனை செல்வாக்கு இருக்காது, இங்கே அவர் சொல்வதைத் தான் நம் ராகுல் கேட்கிறார்’ எனவும், ‘இவர் மார்க்ஸிட் மற்றும் காங்கிரஸ் என இரண்டு கட்சிகளுக்கும் பொதுச் செயலாளராக வேலைபார்க்கிறார்’ என்றும் வெளிப்படையாகவே பேசினர். சீதாராம் யெச்சூரியின் அரசியல் வாழ்வு ஏற்றம் பெறத் தொடங்கியது ராகுலின் பாட்டி காலத்தில்.

இந்திரா காந்தியின் டெல்லி இல்லம். வருடம் 1978. இந்திரா அருகில் நின்றுகொண்டிருக்க, தனது கையில் இருக்கும் காகிதத்தில் எழுதப் பட்டிருந்த இந்திரா மீதான குற்றச்சாட்டுகளை, சீதாராம் வாசிக்கும்படியான புகைப்படம் அப்போது பெரியளவில் கவனம் பெற்றது. அவசரக்காலப் பிரகடனம் முடிந்து இந்திரா பதவி விலகிய பிறகு ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வேந்தர் பதவியில் இருந்தும் விலகக் கோரிய போராட்டம் அது. பல்கலைக்கழகம் கால வரையின்றி மூடப்படும் என அவர் எச்சரித்ததைத் தொடர்ந்து எழுந்த எதிர்ப்பு. போராட்டத்தைத் தலைமை தாங்கி நடத்தியவர் சீதாராம் யெச்சூரி. அப்போது அவர் தான் மாணவர் சங்கத் தலைவர். போராட்டத்தைத் தொடர்ந்து, இந்திரா வேந்தர் பதவியை ராஜினாமா செய்யும்படியானது. சீதாராம், இந்திய மாணவர் கூட்டமைப்பு சங்கத்தின், அகில இந்திய இணைச் செயலராக அமர்த்தப்பட்டார்.

சீதாராம் யெச்சூரி சென்னையைச் சேர்ந்த தெலுங்கு பேசும் குடும்பத்தில் பிறந்தவர். பள்ளிப் படிப்பை ஹைதராபாத்தில் உள்ள ஆல் செயின்ட்ஸ் பள்ளியில் பயின்று வந்த போது தான், அங்கு தனி தெலங்கானாவை வலியுறுத்தி போராட்டங்கள் நடைபெற்றுக்கொண்டிருந்தன. அது அவரின் கல்வி கற்கும் சூழலைப் பாதித்து விடக்கூடாதென அவரின் தந்தை, அவரை டெல்லி சென்று படிக்கும்படி ஏற்பாடுகளைச் செய்தார். 1969 ஆம் ஆண்டு தேசிய அளவில் சிபிஸ்சி தேர்வுகளில் முதல் மாணவனாகத் தேர்ச்சி பெற்றார். அங்கேயே சைன்ட் ஸ்டீபன் கல்லூரியில் இளங்கலை பொருளியல் பிரிவில் சேர்ந்தார். ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் முதுகலை பொருளியல் என இரண்டிலும் முதல் தர மதிப்பெண்கள் தான்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்