12. ராஜ சித்தர்
‘நான் நிரந்தரமானவன். எனது பெற்றோர் பைரவியும், பைரவனும்’ என பிரகடனப்படுத்திக் கொண்டார், மச்சீந்திரர். இமயமலை அடிவாரம் மற்றும் காஷ்மீரத்தில் தனது ஆசிரமங்களை உருவாக்கி, குழுவாக வாழும் வாழ்க்கை முறையை வழிப்படுத்தினார். தமிழகத்தில் ‘மச்ச சித்தர்’ என்று அழைக்கப்பட்டு சித்த மரபில் இவரின் புகழ் சொல்லப்பட்டுள்ளது.
நாத சம்பிரதாயத்தை உலகின் அனைத்துப் பகுதிக்கும் கொண்டு சென்றார் மச்சீந்திர நாதர். அவரது வழிகாட்டுதலில் ஆயிரக்கணக்கானோர் பின்தொடர்ந்தனர். அதில் பல நூறு பேர் நாத சம்பிரதாயத்தின் ஆன்மீகப் புகழ் பெற்றவர்களாகவும் விளங்கினார்கள்.
Add Comment