Home » சாத்தானின் கடவுள் – 15
சாத்தானின் கடவுள் தொடரும்

சாத்தானின் கடவுள் – 15

15 ஆதிமூலமெனும் அலெக்ஸா

ஒரு சம்பவம். யாரும் எதிர்பாராதது. உலக மக்கள் அனைவரையும் திடுக்கிட வைத்த சம்பவம். ஒரு நாள் என்றால் ஒரு நாள் முழுவதும் உலகம் இயங்கிய வேகம் குறைந்தது என்பது மறுக்க முடியாத உண்மை.

விண்டோஸ் கணினிகள் செயல்படாமல் போயின. ஆன் செய்ததும் ஒரு எரர் மெசேஜ் வந்தது. அதை Blue Screen of Death என்று சொன்னார்கள். ஏதோ ஒரு செக்யூரிடி அப்டேட்டில் என்னவோ ஒரு பிழை அல்லது பிசிறு. Crowdstrike என்கிற சைபர் செக்யூரிடி நிறுவனம் தந்த அப்டேட்டில் பிரச்னை. அது மைக்ரோசாஃப்ட் இயங்குதளத்தை செயற்கை நுண்ணறிவு நுட்பம் கொண்டு பாதுகாக்கும் நிறுவனம். எனவே உலகெங்கும் எங்கெல்லாம் விண்டோஸ் கணினிகள் பயன்படுத்தப்படுகின்றனவோ, அங்கெல்லாம் சிக்கல். விமான சேவை முதல் பங்கு வர்த்தகம் வரை பாதிக்கப்படாத துறையில்லை. சமூக ஊடகங்களில் மக்கள் நாளெல்லாம் அதையே பேசித் தீர்த்தார்கள். என்ன செய்ய முடியும்? ஒன்றும் செய்ய முடியாது. சிக்கல் தீரும்வரை காத்திருப்பது ஒன்றே வழி.

இது நடந்துகொண்டிருந்தபோதே வல்லுநர்கள் சிலர் மாற்று ஏற்பாடுகளைச் செய்துகொள்ள வேண்டியதன் அவசியத்தைக் குறித்து மெல்ல மெல்லப் பேசத் தொடங்கினார்கள். மைக்ரோசாஃப்டை மட்டும் நம்பியிருப்பதனால் வருகிற சிக்கல் இது. திறமூல (Open Source) இயங்குதளங்களையும் பழகிக்கொள்வது நல்லது. இது ஒரு வகை. மேக் கணினிகளுக்கு ஆபத்தில்லை. விண்டோஸைத் தலை முழுகிவிட்டு அதற்கு மாறிவிடுவதே நல்லது. இது இன்னொன்று. அப்படியெல்லாம் இல்லை. இம்மாதிரியான சிக்கல் எந்த இயங்குதளத்துக்கும் நேரலாம். இன்றைய வாய்க்கு மைக்ரோசாஃப்ட் அவல்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!