19. மாற்று வழி
ஜ.ரா. சுந்தரேசன் என்ற இயற்பெயரைக் கொண்ட பாக்கியம் ராமசாமி என்கிற நகைச்சுவை எழுத்தாளரை உங்களுக்குத் தெரிந்திருக்கும். படித்திருப்பீர்கள், குறைந்தபட்சம் கேள்விப்பட்டிருப்பீர்கள். குமுதம் வார இதழின் துணை ஆசிரியராகப் பணியாற்றியவர். அவரது எழுத்துப் பாணி, அவர் எழுதுவதற்குத் தேர்ந்தெடுத்த கருப் பொருள்களை வைத்து அவர் என்ன மாதிரியான மனிதராக இருந்திருப்பார் என்று ஒருவாறு ஊகித்து வைத்திருப்பீர்கள். ஒரு காலத்தில் எனக்கும் அப்படியொரு ஊகம் அவரைப்பற்றி இருந்தது. ஜாலியான மனிதர். எளிய மனிதர். அன்பாகப் பேசிப் பழகுவார். என்றாவது நேரில் சென்று சந்திக்க வேண்டும்.
நினைத்ததற்கும் சென்று சந்தித்ததற்கும் இடையில் பல வருடங்கள் புதைந்துவிட்டன. ஆனால், அந்தச் சந்திப்பை மறக்க இயலாது. ஜ.ரா. சுந்தரேசன் எளிய மனிதராகத்தான் இருந்தார். சிரிக்கச் சிரிக்கத்தான் பேசினார். பொடிப்பயல் என்று நினைக்காமல் மிகுந்த அன்பும் மரியாதையும் பாராட்டினார். எல்லாம் நினைத்தது போலத்தான் இருந்தன. ஆனால் அது மட்டுமல்ல அவர். சரியாகச் சொல்வதென்றால் அதுவே அல்ல அவர்.
அருமை. சித்தர்கள் ஏன் மதவாதிகளால் கவனிக்கப்படுவதில்லை என்பதை எளிமையாகச் சொல்லி விட்டீர்கள். ஆனாலும் மதத்தின் வழியே சென்று கடவுளைக் கண்டவர்களும் இருக்கத்தானே செய்கிறார்கள். நீ எதுவாக என்னை நினைக்கிறாயோ அதுவாகவே நான் உனக்குக் காட்சியளிப்பேன் என்பதுதான் இறைத்தத்துவம் எனக்கூறலாமல்லவா? எனில் பலதெய்வ வழிபாடுகளும் உருவ வழிபாடும் தவறில்லையே. அவனையடைய அதுவும் ஒரு வழிதானே?
ரசவாதத்தை உவமையென்றீர்கள். எனில், இந்த இலையையும் அந்தச் சாற்றையும் சந்திரகாந்தக் கல்லையும் மேலும் இன்னின்ன பொருட்களையும் சேர்த்து சேர்மானம் செய்யச் சொல்கிறார்களே சித்தர்கள். அதன் பொருளென்ன? அவற்றையும் மெட்டாஃபோர்கள் என நம் அறிவை வைத்துத் தர்க்கித்து நிறுவி விடலாம்தான். ஆனால், அது தன் அறிவைக்கண்டுத் தன்னைத்தான் வியந்துத் தன்னையே ஏமாற்றிக் கொள்ளும் செயலாக ஏனோ தோன்றுகிறது.
ஜெயமோகனின் “பித்தம்” எனும் அறிவியல் புனைகதை (“விசும்பு” சிறுகதைத் தொகுப்பு) ரசவாதம் பற்றி அழகாகப் பேசுகிறது.