Home » பறிபோகும் டிஜிட்டல் சுதந்திரம்: பாகிஸ்தான் பரிதாபங்கள்
உலகம்

பறிபோகும் டிஜிட்டல் சுதந்திரம்: பாகிஸ்தான் பரிதாபங்கள்

இணையம் தகவல்களை எல்லோருக்கும் திறந்து வைத்திருக்கிறது. நாடு தழுவிய மக்கள் புரட்சியை ஆரம்பிக்கும் சாத்தியம் விரல் நுனியில் இருக்கிறது. டிஜிட்டல் யுகத்தில் சமூக வலைத்தளங்கள் நம் வாழ்வில் அதிகாரம் செலுத்துகின்றன. இதெல்லாம் உண்மைதான். ஆனால் உண்மையான அதிகாரம் எப்போதும் ஆட்சியாளர்களிடத்தில்தான் இருக்கிறது. ஆட்சியில் இருப்பவர்கள் அனுமதிக்கும் வரைக்கும்தான் இவையெல்லாம் செல்லுபடியாகும். அரசாங்கம் நினைத்தால் எதை வேண்டுமானாலும் எந்நேரமும் தடை செய்ய முடியும். அப்படிப் பல நாடுகள் செய்துள்ளன. தற்போது பாகிஸ்தான் இணையத்தில் உலவும் தகவல்களைக் கட்டுப்படுத்த சட்டம் கொண்டுவர இருக்கிறது.

அரசாங்கங்கள் தம் மக்கள் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்களை மட்டுப்படுத்துவது எப்போதும் நடப்பதுதான். டிஜிட்டல் யுகத்திலும் இது மாறிவிடவில்லை. இந்தியாகூட டிக்டாக் உள்ளிட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட சமூக ஊடகச் செயலிகளைத் தடை செய்தது. பாதுகாப்பு என்கிற காரணம் சொன்னது இந்திய அரசு. சுமார் 160 நாடுகளில் டிக்டாக் இன்னமும் பயன்பாட்டில் இருக்கிறது. அவர்கள் எல்லாம் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படவில்லை போலும். டிக்டாக் சீனத் தயாரிப்பு என்பதால் சீனாவுக்குப் பாடம் புகட்டும் வகையில் இந்தியா தடை விதித்ததாகப் பரவலாகச் சொல்லப்பட்டது. சீனாவிலேயே டிக்டாக் செயலிக்கு முழு அனுமதி கிடையாது என்பது தனிக்கதை. வரையறுக்கப்பட்ட கூறுகளுடன் சீனப் பதிப்பு டிக்டாக் மட்டுமே அங்கே பயன்படுத்த முடியும். எக்ஸ் தளம் டிவிட்டர் என்ற பெயரோடு இருந்த காலத்திலேயே சீனாவில் தடை செய்தாகிவிட்டது. பேஸ்புக்கை விடுங்கள், கூகுள் கூடக் கிடையாது. பைடு, சினா வைபோ, விசாட் என்று எல்லாம் சொந்தத் தயாரிப்புகள்தான்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!