பெரிய புயல் காற்று, சோலையைக் கடக்கும் போது எண்ணற்ற இளம் செடிகள் சீற்றம் தாளாது கீழே விழுவதைப் புயல் அறியாது. அதே போலச் சமூக மாற்றங்கள் நிகழும்போது பக்க விளைவுகளாகப் பல விபரீதங்களும் நிகழும். காலப்போக்கில் அரசியல் சட்டங்களும் சுமூக விதிகளும் தீயன குறைத்து நல்லதை அதிகரித்து மாற்றங்களை நிலைக்கச் செய்யும்.
தொலைக்காட்சி வரவேற்பறைகளுக்கு வந்த புதிதில் வயதானவர்களுக்கான திரைப்படங்களைச் சிறியவர்களும் பார்க்க நேர்ந்த பொழுதில் நடந்த மன அழுத்தங்கள் ஒருபுறம்! மட்டற்ற சுதந்திரத்தோடு உலாவரும் யு-ட்யுபின் சென்சாரில்லாத காணொளிகளும் திரைப்படங்களும் தந்த அழுத்தம் மறுபுறம் என்று கொஞ்சம் கொஞ்சமாக விபரீதங்கள் ஆரம்பமாகின,
இணையம் வந்த பிறகு பிறந்த குழந்தைகள் தொழில் நுட்பங்களோடு வளர்ந்ததாலோ என்னவோ… சமூக வலைத்தளங்களைக் கையாள்வதில் பெற்றோரைவிடச் சிறந்தவர்கள். என்னதான் கட்டுப்பாடுகளை விதித்தாலும் அதை மீறும் வழிகள் கற்றவர்கள். எல்லாவற்றுக்குமே ‘ஹவ் டு’ என்ற ஒரு காணொளி இணையத்திலேயே இருக்கிறது!
Add Comment