இன்றைய காலக்கட்டத்தில் நாம் அதிக நேரம் செலவிடும் இடம் எதுவென்றால், சமூகவலைத்தளங்கள்தாம். போனால் திரும்ப வராத ஒன்றான நேரத்தை இப்படி வீணாக்காமல் இருக்க இரண்டு விஷயங்களைச் செய்யலாம். ஒன்று செலவிடும் நேரத்தைக் கட்டுப்படுத்துவது. இரண்டாவது, பின்தொடரும் நபர்களைச் சரியாகத் தேர்ந்தெடுத்து அந்த நேரத்தைப் பயனுள்ளதாக மாற்றுவது.
2012 இல் பிரிட்டிஷ் எழுத்தாளர் ஸேடி ஸ்மித்தின் (Zadie Smith) புகழ்பெற்ற நாவல் NW வெளியானது. நாவலின் உசாத்துணை பகுதியில் Freedom என்னும் மென்பொருளுக்கு ஸேடி ஸ்மித் நன்றி தெரிவித்திருந்தார். நாவலின் முதல் பிரதியை எழுதி முடிக்க Freedom மென்பொருள் பெரிதும் உதவியதாகக் குறிப்பிட்டிருந்தார். Freedom செயலியின் மூலம் கவனத்தைச் சிதறடிக்கும் இணைய தளங்களை பிளாக் செய்து கொள்ளலாம். சமூக ஊடக செயலிகளின் அதீத பயன்பாட்டை நம் கட்டுப்பாட்டில் வைக்க freedom போன்ற கருவிகள் நமக்கு உதவுகின்றன. ஃபேஸ்புக் ஆரம்பித்த புதிதில் அதன் நோட்டிபிகேஷன் பொத்தான் நீல நிறத்தில் இருந்தது. பயனர்கள் அதை சீண்டவில்லை. ஃபேஸ்புக்கின் மென்பொருள் என்ஜினீயர் அதற்கு ஒரு வழி கண்டுபிடித்தார். . நோட்டிபிகேஷன் பொத்தானை சிகப்பு நிறத்துக்கு மாற்றினார். தமக்கு ஏதோ அவசரத் தகவல் வந்துள்ளது என்று பயனர்கள் நம்பத் தொடங்கினர். பயனர்களை எந்நேரமும் அவசர நிலையில் வைத்திருக்க இந்த மாற்றம் உதவியது.













Add Comment