Home » விண்வெளியில் ஒரு ‘பெட்ரோல் பங்க்’
விண்வெளி

விண்வெளியில் ஒரு ‘பெட்ரோல் பங்க்’

ஆச்சர்யமாக இருக்கிறதா? ஆமாம், 2026 இறுதிக்குள் இந்தத் தொழில்நுட்பம் வரப்போகிறது. இதைச் செய்யப்போவது ஒரு அக்மார்க் தமிழர் என்பது கூடுதல் தகவல்.

விண்வெளியில் செயற்கைக்கோள்களுக்கு எரிபொருள் நிரப்புவதற்கு OrbitAID எனும் இந்திய ஸ்டார்ட்-அப் நிறுவனம் செயலில் இறங்கியிருக்கிறது. இந்தத் திட்டம் தேவைதானா? இதனால் என்ன பலன்? இந்த இரு கேள்விகளுக்குப் பதில் தெரிந்து கொள்வதற்கு முன், செயற்கைக்கோள் பற்றி நாம் சிறிது தெரிந்துகொள்ள வேண்டும்.

ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டு, ஒரு குறிப்பிட்ட தூரத்தில் நமது பூமியைச் சுற்றி வரும் கருவிகள்தாம் ‘செயற்கைக்கோள்கள்’ எனப்படுகின்றன. ராக்கெட் மூலம் விண்ணுக்குச் செல்லும் செயற்கைக்கோள், ஒரு குறிப்பிட்ட திசையில் அதிவேகமாகத் தள்ளப்படுகிறது. பூமியின் ஈர்ப்பு விசை அதைத் தன் பக்கம் இழுக்க முயலும்போது, அதன் வேகம் அதை முன்னோக்கித் தள்ளுகிறது. இந்த இழுபறி நிலையில், அது பூமியைச் சுற்றி ஒரு குறிப்பிட்ட பாதையில் விழாமல் பயணம் செய்கிறது. இந்தப் பாதையைத்தான் சுற்றுப்பாதை (Orbit) என்கிறோம்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!