சரித்திர காலம் முதலே ஒற்றர்கள் என்றோர் இனம் உண்டு. உயிரைப் பணயம் வைத்து சொந்த நாட்டுக்குத் தகவல் கடத்துவது அவர்களது பணி. இவர்களின் நாட்டுப் பற்று ராணுவ வீரர்களுக்குச் சற்றும் குறைந்ததல்ல .
இருபது வருடங்களுக்கு முன்பு, ஜியான் குவோ (Jian Guo) என்ற இளைஞன் ஜெர்மனிக்குப் படிக்க வந்தான். யாருக்கும் சந்தேகம் வராத சாதாரண மாணவன். படிப்பை முடித்து ஜெர்மன் குடியுரிமை பெற்றான். வியாபாரம் செய்தான். சமுதாயத்தில் நன்மதிப்பைப் பெற்றான். 2017இல் சீன ஜனநாயக ஆதரவாளர்கள் குழுவுடன் இந்தியாவின் தர்மசாலாவுக்குச் சென்று தலாய்லாமாவையும் சந்தித்தான். யாருக்கும் இவனொரு உளவாளி என்ற சந்தேகமே வரவில்லை.
ஆனால் கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி, ஜெர்மனியின் ட்ரெஸ்டன் நீதிமன்றம் ஜியான் குவோவுக்கு நான்கு வருடம் ஒன்பது மாதம் சிறைத் தண்டனை விதித்தது. அவன் செய்த குற்றம் என்ன? சீன உளவுத்துறைக்காக இருபது ஆண்டுகள் உளவு பார்த்தது. ‘இது ஜெர்மனியில் நடந்த மிகப் பெரிய சீன உளவு வழக்கு’ என்று ஃபெடரல் சட்ட வல்லுநர் குறிப்பிட்டார்.















Add Comment