Home » இலங்கை: யார் குற்றவாளி?
உலகம்

இலங்கை: யார் குற்றவாளி?

நம்ப முடியாத அளவுக்குப் பொருளாதாரச் சரிவில் சிக்கித் தவித்துக்கொண்டிருக்கிறது இலங்கை. இந்த சர்வநாசத்தின் ஆணிவேர் என்ன? தேசம் ஒரே இரவில் பிச்சைப் பாத்திரம் ஏந்த யார் காரணம்? இதன் பின்னணியில் இருக்கும் பொருளாதாரக் குற்றவாளிகள் யார்? சீரழிவின் உண்மைக் காரணத்தை ஆராய்கிறது இக்கட்டுரை.

ஒரு கிலோ தக்காளி 720 ரூபாய். பூண்டு 800 ரூபாய். வெங்காயம் 400. உருளைக்கிழங்கு 400. லிட்டர் பெட்ரோல் 338 ரூபாய். டீசல் 289. சமையல் எரிவாயு உருளை 4860 ரூபாய்.

இலங்கை நிலவரம் இப்படியாக இருக்கிறது. தேசம் திவால் என்று அறிவிக்கப்பட்டுவிட்டதால் மட்டுமே எந்த தேவ தூதரும் உடனே கைதூக்கி விட வந்துவிடவில்லை. பிரதமர் மாறினார். பிரச்னைகள் மாறவில்லை. எங்கும் பதற்றம். எவர் முகத்திலும் கலவரம்.

ஒவ்வொரு பெட்ரோல் நிரப்பு நிலையம் முன்பாகவும் கிலோ மீட்டர் கணக்கில் நீள்கிறது வாகன வரிசை. பெட்ரோல் இல்லாமல் பாதி வழியில் நின்ற வாகனங்கள் சாலையோரம் தேங்கிக் கிடக்கின்றன. சமையல் எரிவாயு உருளைகளைத் தள்ளிக் கொண்டு ஒரு வரிசை. பால்மா வாங்க இன்னொரு வரிசை. மண்ணெண்ணெய் கேன்களைத் தூக்கிக் கொண்டு புழுதி வாரித் தூற்றும் பெண்களின் சிறப்பு வரிசை தனி.

‘யாரும் பெட்ரோல் வரிசைகளில் காத்திருக்க வேண்டாம். இன்னும் மூன்று நாள்களுக்கு தேசம் முழுக்க பெட்ரோல் சப்ளை பண்ண கிடையாது’ என்ற செய்தி ‘பிரேக்கிங்’ என ஓடியதும் வரிசையில் நிற்கும் வாகனதாரர்கள் தம் வண்டியை வரிசையிலிருந்து வெளியே இழுத்துத் தள்ளி நகர்த்துகிறார்கள். ஒவ்வொரு அங்குலமும் குட்டி நரகம் போலக் காட்சி தருகிறது கொழும்பு மாநகரம்.

‘anke’s Inflation Dashboard’ வெளியிட்ட கடந்த மாத இறுதிவரையிலான உலக நாடுகளின் பண வீக்கப் பட்டியலில் 119 சதவீதத்துடன் வெண்கலப் பதக்கத்தைப் பெற்று இருக்கிறது இலங்கை. தங்கத்தையும் வெள்ளியையும் முறையே ஸிம்பாப்வேயும், லெபனானும் தட்டிச் சென்று இருக்கின்றன.

அநேகமாக இன்னும் சில மாதங்களில் தங்கத்தை இலங்கை பெற்றுவிடுமோ என்ற அச்சமும் மக்களிடம் இல்லாமல் இல்லை.

2019 டிசம்பரில் ஒரு இந்திய ரூபாய் 2.5 இலங்கை ரூபாயாக இருந்தபோது இலங்கையில் பெட்ரோல் ஒரு லிட்டர் விலை 137 ரூபாயாக இருந்தது. அது இந்திய மதிப்பில் ரூ.50-க்குக் கிடைத்தது. இன்றைய தேதியில் ஒரு இந்திய ரூபாய் 4.70 இலங்கை ரூபாயாக மாறி உள்ளது.

உதாரணமாக, இலங்கையில் அரசுப் பள்ளிக் கூடம் ஒன்றில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர் ஒருவரின் மாதச் சம்பளம் ரூ.45000. இந்த வருமானத்தில் ரூ.338க்கு பெட்ரோல் அடித்து, காய்கறி வாங்கி சமைத்துச் சாப்பிட்டு வாழ்வாங்கு வாழ்ந்தாக வேண்டும்.

இலங்கையின் பொருளாதாரச சீரழிவை ஒரே வரியில் இப்படி புரிந்து கொள்ளலாம். 1948-ல் சுதந்திரம் கிடைத்தது முதல் அமெரிக்க டாலர் ஒன்றின் இலங்கை மதிப்பு 200 ரூபாய்களாக மாற 74 ஆண்டுகள் எடுத்தன. அதே 200 ரூபாய், 360 ரூபாயாக மாற வெறும் இரண்டு மாதங்கள். பிரையன் லாராவின் 400 ஓட்ட சாதனையை முதலில் முறியடிக்கப் போவது பெட்ரோலா, டாலரா என்பதில்தான் தற்போது போட்டி நிலவுகிறது.

இலங்கையின் ஒட்டு மொத்த கடன் 51 பில்லியன் டாலர்கள். எலன் மஸ்க் ட்விட்டரை வாங்கச செலவழித்த தொகையைவிட எட்டு பில்லியன் டாலர் அதிகம். எரிபொருள் கப்பல் ஒன்றினைக் கொழும்புத் துறைமுகத்தில் இறக்க ஆகும் செலவு 50 மில்லியன் டாலர்கள். கைவசம் ஒரு மில்லியன் டாலர் கூட இல்லை என்கிறார் பிரதமர்.

இலங்கையின் இந்த சர்வ நாசத்தின் ஆணிவேர் என்ன? இத்தேசம் ஒரே இரவில் பிச்சைப் பாத்திரம் ஏந்த யார் காரணம்? இதன் பின்னணியில் இருக்கும் பொருளாதாரக் குற்றவாளிகள் யார்?

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



உங்கள் எண்ணம்

  • Aarumugam Ayyasamy says:

    நல்ல கட்டுரை. இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், பிலிப்பைன்ஸ், சீனா, இந்தோனேஷியா போன்ற நாடுகளுக்கு, வெளிநாடுகளில் வேலை பார்க்கும் மக்கள் அனுப்பும் அன்னியச் செலாவணி பெரும் பயனுள்ளதாக இருக்கிறது. இலங்கை நாட்டவர், குறிப்பாக தமிழர்கள் உலகெங்கும் பரவி இருக்கின்றனர். அவர்களது நம்பிக்கையை அந்நாட்டு அரசுகள் பெற்றிருந்தால், அன்னியச் செலாவணி பற்றாக்குறை என்ற பிரச்னையை ஓரளவுக்காவது சமாளிக்க முடியும். மக்கள் நம்பிக்கையை இழந்த அரசுகள் இப்படி முட்டுச்சந்தில் மாட்டிக்கொண்டு விழிபிதுங்கும் என்பதற்கு கண் கண்ட உதாரணம் இலங்கை

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!