Home » அனுர என்கிற ‘தேசிய க்ரஷ்’
புத்தகக் காட்சி

அனுர என்கிற ‘தேசிய க்ரஷ்’

புத்தகக் காட்சியில் அநுரகுமார

கொழும்பு சர்வதேசப் புத்தகக் கண்காட்சி ரவுண்ட் அப்

கொழும்பு சர்வதேசப் புத்தகக் கண்காட்சிக்கு இது இருபத்தைந்தாவது ஆண்டு. வழமையை விடவும் அதிக ஜனத்திரளுடன். மிக அதிகம் பேசப்பட்ட ஒரு திருவிழாவாக இந்தப் புத்தக விழா மாற ஒரு காரணம் இருக்கிறது. ஒரு விழா ட்ரென்டாவது எப்படி? மிகப் பிரபலமான ஒருவர் அங்கே சர்வ சாதாரணமாக வந்திறங்கி, விழா முழுக்க உலா வர வேண்டும். இலங்கையின் அதிபர், நிகழ்வின் இரண்டாவது தினமன்று அங்கே விஜயம் செய்திருந்தார். தேர்தலில் வென்ற சூட்டோடு, நாட்டின் எல்லா வயதுப் பெண்களினதும் தேசிய க்ரஷ் ஆக வலம் வரும் ஒருவர் அங்கே பொது மக்களுக்குள் திடீரென வெளிப்பட்ட போது, அரங்கமே அதிர்ந்து நின்றது. அன்றைய தினம் லட்சக் கணக்கானவர்களின் தொலைபேசியில் அவரது புகைப்படம் பதிவாகி, சகல ஊடகங்களிலும் தீயாய்ப் பறந்தன. அது முதல் புத்தக விழாவும் பயங்கரமாகப் பிரபலமடைந்து விட்டது. புத்தகக் கொண்டாட்டமாகவே மாறிவிட்டது எனலாம்.

இது ஓர் அரச நிகழ்வேயல்ல. இலங்கை புத்தக வெளியீட்டாளர்கள் சங்கம் நடத்தும் தனிப்பட்ட கொண்டாட்டம். குறித்த அந்த எட்டுத் தினங்களில் பல லட்சம் புத்கங்கள் கைமாற்றப்படும். புதிய புத்தகங்கள் பிறந்து வரும். ஏராளமான புது எழுத்தாளர்கள் உலகத்தைக் காண்பர். விருதுகளும் , கௌரவங்களும் உரியவர்களைச் சேரும். நாட்டின் தலைவர் அங்கு வருவதாக இருந்தால், முதலில் மண்டபம் மூடப்படும். பாதுகாப்பு பலப்படுத்தப்படும். பொதுமக்கள் காத தூரத்திலிருந்து கையசைக்க, ரணில் விக்ரமசிங்க , மைத்ரிபால சிரிசேன போன்றோர் கடந்த வருடங்களில் கலந்து சிறப்பித்திருந்தனர். ஆனால் அனுர குமார வந்த விதமே வேறு. சிறுவர் புத்தகங்கள் வெளியிடுவது சம்பந்தமான ஒரு புதுச் சட்டமூலத்தை வெளியிடும் முகமாக, பக்கத்திலிருந்த அரங்கத்திற்கு வந்தவர், அப்படியே பிரதான மண்டபத்திற்குள் நுழைந்து விட்டார். பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் குழுமியிருந்த பெண்களின் கண்களில் கண்ணீர் துளிர்த்தது. போகும் போது பெரும் புத்தகப் பையை நிரப்பிக் கொண்டு, கூட்டத்திற்கூடாக ஊர்ந்து சென்றதால் சம்பவம் இளைஞர்கள் மத்தியில் ஒரு கௌரவ நிகழ்வாகப் பதிவாகி விட்டது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!