இலங்கையில் தமிழர்கள் இருக்கிறார்கள். ஆனால் புலிகளின் காலத்துக்குப் பிறகு அவர்களுக்குக் குரல் இருக்கிறதா?
தமது குரலை பாராளுமன்றத்தில் ஒலிக்கச் செய்வதற்கும் ராஜதந்திர ரீதியில் சர்வதேசத்தை எதிர்கொள்ளவும் புலிகளுக்கு அரசியல் முகம் ஒன்று தேவைப்பட்டது. விளைவு 2001-ம் ஆண்டு அன்றைய முன்னாள் போராளி இயக்கங்களான ஈ.பீ .ஆர்.எல் எப், டெலோ, புளொட் அமைப்புகளுடன் பழம் பெரும் தமிழரசுக் கட்சியும் இணைந்து கொள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவானது. அதே ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் புலிகளின் ஏகமுகவர்களாக பாராளுமன்றத்திற்குள் பதினைந்து உறுப்பினர்கள் நுழைந்த நிகழ்வானது சிங்களத் தேசியவாதிகளுக்கு மிகுந்த எரிச்சலையும் பதட்டத்தையும் அப்போது ஏற்படுத்தின.
Add Comment