காலையில் அமைதியாய்ப் பள்ளிக்குக் கிளம்பிக்கொண்டிருந்தாள் திலிப்போன்சா. திடீரென அம்மாவின் ‘திலிப்போன்சா திலிப்போன்சா’ என்ற பதற்றமான குரலும் அவளை நிலத்தில் தள்ளிய கையும் புரியாமல் பாம்பு போல ஊர்ந்து அடுத்த அறைக்குள் அவளும் அம்மாவும் சென்று, அவளின் தம்பியைத் தூக்கிக்கொண்டு, புத்தகப்பையில் சில துணிமணிகளை அடைத்துக்கொண்டு ஓடினார்கள். துப்பாக்கிச் சத்தம்!! ஏழு வாரங்கள் ஓடி, புதர்களில் தூங்கி ஒரு முகாமுக்கு வந்தால், 10 ஆயிரம் பேர் இருக்கும் இடத்தில் 40 ஆயிரம் பேர்.
அப்பா எங்கே என்ற திலிப்போன்சாவிற்கு ‘வந்தாலும் வருவார்’ என்ற பதில்தான் கிடைத்தது. சில வாரங்கள் மட்டுமே தங்குமிடம், சில வருடங்களாகியும் மாறவில்லை. எழுபத்தெட்டு பேருக்கு ஒருவர் என்ற கணக்கில் அவரவர் வீட்டை விட்டு, நாட்டை விட்டுத் துரத்தப்படுகிறார்கள்.
Add Comment